Tamilstar
News Tamil News

மாஸ்டர் அப்டேட்.. படத்தில் நடித்துள்ள நடிகர் வெளியிட்ட மாஸ் தகவல்

முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. ஆனால் வரும் தீபாவளி அன்று மாஸ்டர் படம் வெளிவரும் என சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் டிவி புகழ் நடிகர் தீனா தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜூன் 22 சிறப்பான சம்பவம் இருக்கு” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதனை வைத்து பார்க்கும் பொழுது வரும் விஜய்யின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அல்லது டீசர், வெளிவர வாய்ப்புகள் அதிகம் என கூறலாம்.