நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவிற்கு இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும் அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கமிங் பாடல் இந்திய அளவில் வைராகியுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் மாஸ்டர் திரைக்கதையை எழுதியுள்ள பொன் பார்த்திபன் பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழக்கையில் ஒருவரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த மாஸ்டர் திரைப்படத்தை உருவாகியுள்ளார்” என கூறியுள்ளார்.