லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கல்லூரி வாத்தியாராக தளபதி விஜய் மற்றும் அவரை எதிர்த்து நிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இப்படம் ஏப்ரல் மாதமே வெளிவரவிருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
சமீபத்தில் இப்படம் OTT-யில் வெளிவரும் என கூறப்பட்டு வந்தது. ஆம் அதற்கு ஏற்றார் போல் OTT நிறுவனங்கள் மாஸ்டர் படத்தை 100 கோடிக்கு மேல் வாங்க தயாராக இருந்தனர்.
ஆனால் விஜய் தரப்பில் இருந்து இப்படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என வெளிப்படையாக கூறிவிட்டனர்.
இந்நிலையில் இப்படம் வரும் 2021 பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. இதனை குறித்து விஜய் பிறந்தநாள் { ஜூன் 22 } அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.