மாஸ்டர் படத்தின் டீசர் எப்போது என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. படம் தீபாவளிக்கு தான் வெளியாகவில்லை. டீசரையாவது வெளியிடலாமே என்ற எதிர்பார்பு இருந்தது.
இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதே போல குறிப்பிட்ட அந்த நேரத்தில் தீபாவளி பண்டிகை நாளில் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் மற்றும் படக்குழுவில் இருப்பவர்கள் டிவிட்டரில் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கால் படம் வரும் 2021 ஜனவரி பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படம் ஜனவரி 10 ம் தேதி வெளியாகலாம் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பொறுத்திருப்போம்.