Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படத்தில் பாட்டுபாடிய மாஸ்டர் பாடகர்

Master singer sing song in valimai movie

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் கும்தா என்ற பாடல் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது இப்படத்தில் லோக்கல் குத்து ஒன்று இருப்பதாகவும், அந்த பாடலை அறிவு பாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாடகர் அறிவு எஞ்சாய் எஞ்சாமி என்ற ஆல்பம் சாங்கை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற வாத்தி ரெய்டு என்ற பாடலையும் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.