லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் முதன் முறையாக நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் இருவருக்கு வில்லாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போயுள்ள இப்படம், வரும் பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என்று, ஒரு கதை லீக்காகியுள்ளது.
மாஸ்டர் கதை :
தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது வகுப்பு நடக்கும் நேரங்களிலும் கல்லூரிக்குள் இருக்கும்போதும் குடி கூத்து என அலப்பறை செய்து வருகிறார்.
குடியால் தனது இரண்டு கண்ணையும் இழந்து விடுகிறாராம் தளபதி விஜய். இதன்பின் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பாதுகாவலாக பணிமாற்றம் செய்யப்படுகிறார்.
அங்கிருக்கும் பல சிறுவர்கள் போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்டு பிடிக்கும் விஜய், அதை யார் செய்வது, இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மாற்றுத்திறனாளி சிறுவரைகளை வைத்து கண்டுபிடிக்கிறார்.
குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருட்களை விற்கும், நபராக இருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து, அதன் மூலம் அதற்கெல்லாம் காரணம் அர்ஜுன் தாஸ் அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி தான் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார்.
இதன்பின் வில்லன் விஜய் சேதுபதிக்கும், ஹீரோ விஜய்க்கும் நடக்கும் யுத்தம் தான் மாஸ்டர் என காதல் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவி கொண்டிருக்கிறது. ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை.
ஆனால் படத்தின் அம்சம் மற்றும் விஜய்யின் மாறுபட்ட லுக், இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, இந்த கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.