Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளி அன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய விருந்து, இத்தனை நாள் காத்திருந்தது வீணாகவில்லை

master teaser from diwali

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் , இப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. மேலும் தற்போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளதால் அடுத்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் வரும் நவம்பர் 14 தீபாவளி என்பதால் மாஸ்டர் படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமின்றி தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்த அறிவிப்பும் வரும் தீபாவளியில் தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.