இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதும் இல்லாமல், இந்திய அளவில் மிக பெரிய லெவல் ட்ரெண்டானது என்று தான் கூறவேண்டும்.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன், ஒரு பேட்டியில் “நான் மாஸ்டர் ஆடியோ லான்ச்க்காக சென்னைக்கு வந்திருந்த பொது, மாஸ்டர் படத்தின் ட்ரைலரை பார்த்தேன்.
ட்ரைலர் மாஸ்ஸாக இருந்தது, ஒரு ரசிகையாக எனக்கும் புல்லரித்தது” என கூறியுள்ளார்.