லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. இந்த கேரக்டரை ரசித்து நடித்ததாகவும், பெரிய நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடிக்கும் போது எப்படியிருக்கும் என தான் பயந்ததாக கூறியுள்ளார்.
மேலும் சினிமாவுக்கு வந்த பின் பெயர், புகழ், செல்வம் என எல்லாம் கிடைத்தும் தன்னுடைய அப்பாவித்தனத்தை இழந்துவிட்டதாகவும் சினிமாவில் பணியாற்றும் முன் வரை நேர்மையாகவும், நல்லவனாகவும் இருந்ததாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என ரசிகர்களாக கொண்டாடப்படும் நடிகர். தமிழ் படங்கள் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.