Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மழை பிடிக்காத மனிதன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

mazhai pidikkadha manidhan 2 days collection

மழை பிடிக்காத மனிதன் படத்தில் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான படம் மழை பிடிக்காத மனிதன்.

இந்தப் படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். கமல் போஹரா தயாரிப்பிலும், விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி சேர்ந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

மேலும் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகி இரண்டு நாள் முடிந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மழை பிடிக்காத மனிதன் படம் 2 நாளில் 1.03 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

mazhai pidikkadha manidhan 2 days collection

mazhai pidikkadha manidhan 2 days collection