தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நடிகர் இம்ரான் கான், ரிஷி கபூர் ஆகியோர் அண்மையில் புற்றுநோயால் இறந்தனர். இந்நிலையில் இளம் நடிகை Mebiena Michael இறந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாடலிங் நடிகையும், கன்னட டிவி சானல் பிரபலமுமான செவ்வாய்க்கிழமை மாலை தேவி ஹள்ளியிலிருந்து கோரக்கில் உள்ள மடிகேரிக்கு காரில் சாலை மார்க்கமாக சென்றுள்ளார்.
அவர் சென்ற வாகனம் டிராக்டருடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் அகால மரணமடைந்துள்ளார்.
இச்செய்தி அவரின் குடும்பத்தாரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.