மாமர இலையில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம்.
மாமர இலை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. சர்க்கரை நோயில் பாதிக்கப்பட்டால் நாம் உணவு முறைகளை மாற்றி ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் ரத்த சர்க்கரை அளவு குறையாமல் இருந்தால் அவர்களுக்கு கண்கள் சிறுநீர்ப்பை இதயம் போன்றவை செயலிழக்க நேரிடும்.
அப்படி கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த மருந்து மா இலைகள்.
மா இலைகளில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும். மேலும் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண் பார்வையை அதிகரிக்க மா இலைகளை சாப்பிட வேண்டும்.
மா இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்..
முதலில் பத்திலிருந்து பதினைந்து மா இலைகளை எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு இரவு முழுவதுமாக அதனை அப்படியே விட்டு தண்ணீரை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்படி நாம் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சனையால் வரும் நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.