ஊமத்தையில் பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.
ஊமத்தை செடி சாலை ஓரங்களில் மற்றும் நிலங்களில் அதிகமாக காணப்படும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது யாருக்குத் தெரியும்? வாங்க பார்க்கலாம்..
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உபயோகிக்கப்படும் மருந்துகளில் ஊமத்தை பயன்படுத்தப்படுகிறது.
பிரசவ காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மயக்க ஊசியில் மூலப் பொருளாக இது பயன்படுகிறது.
இந்த இலை விஷமாக இருந்தாலும் மூட்டுவலிக்கு மருந்தாக இருக்கிறது. ஊமத்தையில் இருக்கும் பங்கு காயத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் காதில் வலி ஏற்படும் போது ஊமத்தை பயன்படுத்தினால் காது வலி குணமாகும்.
வழுக்கையால் அவதிப்படுபவர்கள் ஊமத்தை இலைகளை பயன்படுத்தி அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
முக்கியமாக இலைகளை பறித்த பிறகும் அதை பயன்படுத்திய பிறகு கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு குழந்தைகளுடனும் பெரியவர்களுடனும் பேசுவதோ விளையாடுவதோ செய்ய வேண்டும்.