தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. 90களில் பேவரைட் நடிகையான இவர் தற்போதும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை மீனா திரையுலகிற்கு வந்து 40 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறார். இதனையொட்டி அவரை கௌரவிக்கும் விதமாக மீனா 40 என்னும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைவர் ரஜினிகாந்த், போனி கபூர், கலைப்புலி எஸ் தானு, ராஜ்கிரண், பிரபுதேவா, தேவா, சினேகா, ரோஜா, சங்கீதா, குஷ்பூ என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் மாஸான என்ட்ரி வீடியோ ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.
Superstar Entry at #Meena40 Event.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 5, 2023