Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா

Meena teams up with Mohanlal again

மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இதனிடையே, மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.