Tamilstar
News Tamil News

பாலியல் மிரட்டல் விடுத்த பிரபல நடிகரின் ரசிகர்கள்! – மீரா சோப்ரா பரபரப்பு புகார்

அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. தனது நிஜப்பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் இந்தியில் நடித்து வருகிறார். மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.

சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை விட மகேஷ் பாபு தான் மிகவும் பிடிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்ததால், கடுப்பான ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர். அதில் பாலியல் மிரட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக நடிகை மீரா சோப்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து கருத்து பதிவிட்ட மீரா சோப்ரா, உங்களை விட மகேஷ்பாபு தான் பிடிக்கும் என்று கூறியதால் (சில அநாகரிகமான பதிவுகளைக் குறிப்பிட்டு) இப்படியெல்லாம் நான் அழைக்கப்படுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உங்களது ரசிகர்களால் எனது பெற்றோருக்கும் இப்படிப்பட்ட வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

இப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றிருப்பது தான் வெற்றி என்று நினைக்கிறீர்களா? எனது இந்த பதிவிற்கு பதிலளிப்பீர்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதுபோன்று அவதூறாக பேசுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று பாடகி சின்மயி மீரா சோப்ராவிடம் டுவிட்டர் வாயிலாக தெரிவித்தார்.