மாடல் அழகியும் – நடிகையுமாக மீர மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் போதை ஏரி புத்தி மாறி’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் – 3′ நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார்.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.
எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன்பு, “My Quarantine With You @yogeshvijayan90”, என்ற தலைப்புடன் உள்ள ஒரு காணொளியில் அவர் ஒருவருடன் தனிமையில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் இது தொடரும் என்றும் அப்போது தெரிவித்தார். இதற்கு அடுத்தபடியாக வெளியிட்ட பதிவில் “தான் காதலில் விழுந்து கொண்டிருப்பதாகவும்” தெரிவித்தார் மீரா.
இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் Bridal makeup போட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த காணொளியில் “Soon to be Married” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Soon ♥️
( This is REAL. Don’t copy this too ) pic.twitter.com/uOU6BsyY9S— Meera Mitun (@meera_mitun) May 29, 2020