Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை சீண்டுனா அவ்வளவு தான்.. விஜய் விமர்சனம் செய்து தலைக்கு ஆதரவாக பதிவிட்ட மீரா மிதுன் – சலசலப்பை ஏற்படுத்திய பதிவு.!

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவர்களைப் பற்றி யார் பேசினாலும் பிரபலமாகி விடுவார்கள். இதனால் சர்ச்சைக்குரிய நடிகை என மீரா மிதுன் கடந்த சில மாதங்களாகவே தளபதி விஜய் கோலிவுட் மாபியா மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கைகள் அஜித்தை வைத்து வீட்டையும் விட்டு வெளியே வர மாட்டேன் போடா என புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.

இதனால் அஜீத் ரசிகர்கள் உச்சகட்ட கோபமடைந்த அதுமட்டுமல்லாமல் அந்த பத்திரிக்கையை மோசமாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் யாருடைய வம்பு தும்புக்கும் போகாத நல்ல மனிதர் என அவருக்கு சப்போர்ட் செய்துள்ளார்.

அதே பதிவில் வழக்கம்போல தளபதி விஜய்யை மொத்தமாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் சிலர் உன்னுடைய சொந்த ஆதாயத்துக்காக தல அஜித்தை பற்றி பேசாதே என கூறி வருகின்றனர்.

அதாவது தல, ஆடியோ லான்ச்சில் வீரமான ஆள் மாதிரி பேசி விட்டு அப்புறம் மன்னிப்பு கேட்பவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.