Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் சூப்பர் மாடலை சீண்டிய சம்யுக்தா.. புகைப்படத்தை வெளியிட்டு மீராமிதுன் கொடுத்த பதிலடி – என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

பிக் பாஸ் வீட்டில் சூப்பர் மாடலான தன்னை சீண்டிய சம்யுக்தாவிற்கு மீரா மிதுன் பதிலடி கொடுத்துள்ளார்.உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகிறது தொடங்கி ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ளன.

சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களின் சோகக் கதையை பற்றிப் பேசுமாறு டாஸ்க் கொடுத்திருந்தார். அப்படியான டாஸ்க்கில் பேசிய போது சம்யுக்தா நான் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.

ஆனால் ஒரு போதும் தன்னை சூப்பர் மாடல் என சொல்லி கொள்ள மாட்டேன். இதனையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். இவர் மீரா மிதுனை தான் கிண்டல் அடிக்கிறார் என வெளிப்படையாக தெரிந்து விட்டது.

இந்த நிலையில் மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சம்யுக்தா சிறந்த புன்னகைக்கான விருதை என் கையில் தான் வாங்கினார். என் மீது பொறாமை இருக்க தானே செய்யும் என கூறியுள்ளார். நான் உண்மையில் ஒரு சூப்பர் மாடல் என்ற உண்மை வெளியில் வருகிறது என கூறியுள்ளார்.