டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ரிஹானே தனது டுவிட்டரில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மியா கலிபாவும் தனது ஆதரவை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் ’டெல்லியில் என்ன மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு வருகின்றன? போராட்டக்களத்தில் இணையசேவை துண்டித்து விட்டார்களாமே? என தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படி என்றால் விருது வழங்கும் விழாவில் அவர்களின் பெயர்களை பரிசீலிக்கலாமே? என்றும் நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரிய நடிகர்-நடிகைகள் யாரும் ஆதரவு தராத நிலையில் வெளிநாட்டிலுள்ள நடிகர்-நடிகைகள் ஆதரவு தந்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (@miakhalifa) February 3, 2021