Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் உதயாவின் செக்யூரிட்டி குறும்படத்தை பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு – என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகும் வலம் வருபவர் உதயா. இயக்குனர் ஏ எல் விஜய் தம்பியான இவர் பல படங்களில் நடித்து வருவதோடு படங்களை தயாரித்தும் வருகிறார்.

மேலும் இவர் செக்யூரிட்டி என்ற குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். ராணுவ வீரர் பழனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இந்த குறும்படம் பார்த்து நடிகர் உதயாவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.