Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன் மகனுக்கு கிருஷ்ணர் கெட்டப் போட்டு புகைப்படம் வெளியிட்ட மிர்ச்சி செந்தில். போட்டோஸ் வைரல்

mirchi-senthil-family-krishna-jayanthi

தமிழ் சின்னத்திரை எண் ரேடியோ ஜாக்கியாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஹீரோவாக நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் பாசக்கார அண்ணனாக நடிப்பில் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் செந்தில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் தன்னுடைய மகனுக்கு கிறிஸ்தவர் வேஷம் போட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.

சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை செந்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.