Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிர்ச்சி செந்தில் நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ வீடியோ வைரல்

mirchi-senthil-in-anna-serial-promo

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா என்ற சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா தமிழ்ச்செல்வி மிர்ச்சி செந்தில் முதல் தங்கையாக நடிக்க பாக்கியலட்சுமி சீரியல் ரோசரி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க நாயகியாக நித்யா ராம் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

ஆனால் சில காரணங்களால் ரித்திகா இதில் இருந்து விலகிக் கொள்ள பிரபல சீரியல் நடிகை சுனிதா அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. முருக பக்தரான மிர்ச்சி செந்தில் வேல் குத்தி கொண்டு ஆக்ரோஷமாக ஆடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ சூட்டிற்காக மிர்ச்சி செந்தில் ஒரு வாரம் மாமிசம் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)