பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் மிர்ச்சி செந்தில்.
இந்த சீரியலைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் இவர் நடித்தார். இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அண்ணா என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்கிறார். திருச்செந்தூரில் நடக்கும் கதையாக இந்த சீரியல் உருவாக உள்ளது.
சமீபத்தில் இந்த சீரியலுக்கான பூஜை நடைபெற்று உள்ளது. இது செந்திலுக்கு ஜோடியாக நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நடிக்கிறார். சீரியல் பூஜை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.
செந்தில் ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க நித்யா ராம் ஒரு நாளைக்கு 23 ஆயிரம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட்டிங்காக இருந்து வருகிறது.
