டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கென தனி ரசிகர்கள், ரசிகைகள் பட்டாளம் இருக்கிறது. அஞ்சனா, தியா, பாவனா, மா.கா.பா, கீர்த்தி, ரியோ, நிஷா என பலரின் வரிசையில் தற்போது விரைவாக பிரபலமானவர் விஜய்.
மிர்ச்சி விஜய் என பலரும் இவரை அழைப்பாளர்கள். தனியார் FM நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர் முக்கிய டிவி சானலில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பின் அவரின் மனைவி மோனிகா கர்ப்பமானார். வளைகாப்பும் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ரசிகர்கள், ரசிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.