தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை தொலைக்காட்சியின் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.
முதன்முதலாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாக இருந்தார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படம் கைவிடப்பட்டதால் மெரினா படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களாக எடுத்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மாசான கதாபாத்திரங்களிலும நடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் இவரது நடிப்பில் உருவாக இருந்து பின்னர் அந்த வாய்ப்பு வேறு நடிகர்களுக்கு சென்று மெகா ஹிட்டான கதையும் உண்டு.
அப்படி சிவகார்த்திகேயன் தவறவிட்டு சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
1. வழக்கு எண் 18/9
2. பாண்டிய நாடு
3. ராஜா ராணி
4. கடைக்குட்டி சிங்கம்கடைக்குட்டி சிங்கம்