இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. பொங்கலுக்கு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ திரைப்படம் பொங்கல் ரேஸில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ திரைப்படம் வெளியானதையடுத்து நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், கதாநாயகி எமி ஜாக்சன் ஆகியோர் ஈஷா ஆதியோகியை தரிசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.