கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் தான் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவர் தற்பொழுது தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இயக்குனர் செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” முதல்வர் ஸ்டாலின் எங்களது வீட்டுக்கு வந்து எங்கள் குடும்பத்தை சந்தித்தது கவுரவம். இது ஒரு விசேஷமான சந்திப்பு” என்று தனது மகிழ்ச்சியான தருணத்தை பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022