விஜய் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார் மோகன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், யோகி பாபு ,லைலா, ஜெயராம், பிரேம்ஜி, வைபவ் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
இந்நிலையில் நடிகர் மோகன் விஜய் குறித்த தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில், சூட்டிங்கில் ஷாட்டின் இடைவெளியில் யாரிடமும் எதுவும் பேச மாட்டார், மற்றும் போன் நோண்டுவதோ ஜாலியாக சுற்றுவதோ அவரிடம் இருக்காது. இது மட்டுமில்லாமல் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருப்பார்.மேலும் விஜய் இடம் நான் கற்றுக் கொண்டது அவரது அமைதியை தான் என்று கூறி இருக்கிறார் அதனை அவரிடமே நான் சொல்லியும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.