“மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதையடுத்து நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் \”வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்\” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \”எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு\” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023