Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தை தயாரிக்கும் போனிகபூர்

mohanlal meets boney kapoor

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு வலிமை படத்தை தயாரித்துள்ளார். தற்போது வினோத்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுத்து அதை இந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிட திட்ட மிட்டுள்ளார் போனிகபூர்.

இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பில் மோகன்லாலை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக மோகன்லாலுக்கு பெரிய சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார் போனி கபூர். பொதுவாக மலையாள சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் என்பது குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த படத்தை போனி கபூர் பிரமாண்டமாக எடுக்க இருப்பதாக மலையாள சினிமாவில் பேசப்படுகிறது.