கொரோனாவால் சினிமா திரையுலகம் தொழில் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் ஆகியுள்ளதால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல சினிமா ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடிகர் ராணவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்னும் சிலருக்கு திருமணமும் எளிமையாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் ஓர்மையில் ஒரு சிஷ்ரம் என்ற மலையாள படத்தில் நடித்த அனஷ்வராவுக்கு தின்சித் தினேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தினேஷ் மரைன் இன்ஜினியராக இருக்கிறாராம். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாம்.