தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்திலும், கே. வி. என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாக உள்ள தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று விமர்சையாக நடந்து முடிந்தது.
மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மோனிஷா தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். விஜய் உடன் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில், தளபதி 69 படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பாக்கியம், விஜய் சார் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் என் கனவு நினைவாக்கியுள்ளது. மேலும் தளபதி விஜய் சார்,எச் வினோத் சார், மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் தயாரிப்பு நிறுவனம் என அனைவருக்கும் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மோனிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram