Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

mookuthi amman 2 movie budjet update

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார்.

OTT யில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றிருந்தது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்தது.

ஆனால் ஆர்.ஜே பாலாஜி இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் சுந்தர் சி இந்த படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டிலேயே படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே அம்மனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

mookuthi amman 2 movie budjet update
mookuthi amman 2 movie budjet update