மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நயன்தாராவிற்கும் உதவி இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டதால் நயன்தாரா உதவி இயக்குனரை திட்டி இருக்கிறார். இதனால் சுந்தர் சி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நயன்தாராவை நாயகியாக வைத்து படத்தை தொடர முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
உடனே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நயன்தாராவிடம் பேசி பிரச்சனையை சரி செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சுந்தர் சி நயன்தாராவிற்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதனால் நயன்தாரா படப்பிடிப்பை தொடர்வாரா? இல்லை தமன்னா நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.