Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பில்ஆர் ஜே பாலாஜியின் பெயர் இடம் பெறாததற்கு காரணம் இதுதான், வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த அறிவிப்பில் ஆர் கே பாலாஜியின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. இயக்குனர் குறித்த தகவலும் குறிப்பிடவில்லை. இதனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் ஆர்.கே பாலாஜி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் டைட்டிலை கேட்க அவர் கொடுக்க மறுத்து விட்டதாகவும் அதனால் அவர் மாசாணி அம்மன் என்ற பெயரில் படத்தை எடுக்க இருப்பதாகவும் அந்த படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆர் ஜே பாலாஜியின் இந்த முடிவால் அவருக்கு போட்டியாக தயாரிப்பு நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2-வை அறிவித்துள்ளனர், அதை நயன்தாரா தான் நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவி வருகிறது.

Mookuthi Amman 2 movie latest update viral
Mookuthi Amman 2 movie latest update viral