Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருணாச்சலம் சொன்ன வார்த்தை,நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

moondru mudichi promo update 03-12-2024

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்க சுந்தரவல்லியை அருணாச்சலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு அருணாச்சலம் சிங்காரத்திடம் மன்னிப்பு கேட்க, ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க என்று அருணாச்சலம் கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல நார்மலா இருக்காங்கன்னு சொல்லிட்டாங்க என்று சிங்காரம் சொல்கிறார். நடந்ததெல்லாம் ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சு என்று சொல்ல,சிங்காரம் என் புள்ள கிராமத்துல இருந்த புள்ளையா இந்த இடத்துல கிழக்கும் தெரியாது வடக்கும் தெரியாது நீங்க இருந்த தைரியத்துல தான் நான் விட்டுட்டு போனேன் என்று சொல்ல இன்னமும் அந்த தைரியம் இருக்கணும் சிங்காரம் திடீர்னு நந்தினி வீட்டை விட்டு போவானு நினைக்கல என்று சொல்ல உடனே அருணாச்சலம் நந்தினி இடம் எதுக்குமா வீட்டை விட்டுப் போன ஏதாவது பிரச்சனைனா என்னிடம் சொல்லி இருக்கலாம் என்று சொல்லுகிறார்.

உன்னை தேடி நானும் சூர்யாவும் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கோம் ஆனா நீ டிக்கில இருந்ததா சொல்ற உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்னம்மா இருக்கும் என்று கேட்கிறார். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லமா நான் அவ்வளவு அந்நியம் ஆயிட்டேனா என்று அருணாச்சலம் கேட்க, சிங்காரமும் வீட்ல இருக்குற பெரியவங்க கிட்ட சொல்லி இருக்கணும் தானே, என்று சொல்லி நந்தினியை கண்டிக்கிறார்.ஆனால் சிங்காரம் என் புள்ளைய கடத்துற அளவுக்கு இங்கே யாரும் எதிரி கிடையாது இதை யாரோ பண்ணி இருக்காங்க என்று சொல்ல அருணாச்சலம் கண்டிப்பா நான் இதை கண்டுபிடிப்பேன் என்று சொல்லுகிறார்.

பிறகு சிங்காரம் ஊருக்கு கிளம்புறேன் என்று சொல்ல அருணாச்சலம் வீட்டுக்கு வா சிங்காரம் என்று கூப்பிடுகிறார்.நந்தினியும் கூப்பிட இல்லமா உன் விஷயம் தெரிஞ்சவுடன் அப்படியே வந்துட்டேன் வீட்ல இருக்கிறவங்களை சமாளிக்கணும் என்று சொல்லுகிறார். நந்தினிக்கு ஆறுதலா இருக்கும் வா சிங்காரம் என்று சொல்ல, பிறகு நந்தினி இடம் வீட்ல ஏதாவது பிரச்சனைனா உடனே அம்மா வீட்டுக்கு வந்துரக்கூடாது என்று அட்வைஸ் செய்கிறார். அருணாச்சலம் விட்டுடவா என்று கேட்க வேணாம் ஐயா ஆட்டோல போகிறேன் என்று கிளம்ப நந்தினி இடம் தைரியம் சொல்லிவிட்டு கிளம்ப நந்தினி வீட்ல இருக்குறவங்களுக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் உங்க பயப்படுவாங்க என்று சொல்லுகிறார்.

பிறகு மூவரும் காரில் வர இதுவரைக்கும் பயப்படாத நான் ரோடு ரோடா உன்னை தேடி அலைஞ்சமா உன் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பதறிப் போயிட்டம்மா என்று சொல்ல என்னோட போன திருடர்கள் எடுத்து கிட்டு போய்ட்டாங்க என்று ஆரம்பித்து கடத்தி வைத்திருந்த விஷயங்கள் வரை அனைத்தையும் அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். அவங்க கடத்தி வச்சிக்கிட்டு இருந்த அப்போ சூர்யா சாரையும் உங்களையும் நான் பார்த்தேன் என்பதையும் சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் இப்பயாவது சுந்தரவல்லி பண்ணலனு நம்புறியா என்று சொல்ல இப்பவும் நான் தாய்க்குலம் தான் பண்ணி இருப்பாங்கன்னு உறுதியா நம்பர என்று சொல்லுகிறார். நந்தினி சொல்ற ஆள் அவங்க இல்லன்னு உனக்கு தெரியலையா என்று சொல்ல, கடத்த சொன்னவங்க நேரடியா வந்து மாஸ்க் போட்டு கடத்துவாங்களா என்று சொல்லிவிட்டு இதை கண்டிப்பா அவங்க தான் பண்ணி இருப்பாங்க என்று சூர்யா சொல்லுகிறார் உடனே அருணாச்சலம் உன்னை திருத்தவே முடியாது நீ போ என்று சொல்லுகிறார்..

பிறகு வீட்டுக்கு வந்த சுந்தரவள்ளி கோபமாக உள்ளே செல்கிறார். உடனே சுரேகா மாதவியை நிறுத்தி நீ போய் சமாதானப்படுத்த போகாத கோவத்துல கடிச்சு துப்பிடுவாங்க என்று சொல்லுகிறார். உடனே மாதவி நம்ப ஒன்னு நெனச்சா வேற ஒன்னும் நடக்குது இவை என்னடான்னா டிக்கிக்குள்ள இருக்கா, திடீர்னு தலையில கட்டு போட்டுட்டு வந்து நிக்கிறா, சூர்யா கேஸ் கொடுக்கிறான் ,இங்க என்ன நடக்குதுன்னு தெரியல என்று சொல்லுகிறார். அம்மா கடத்துலனா அப்போ யார் கடத்தியிருப்பாங்க அவங்க அப்பாவுக்கு யார் ஃபோன் போட்டு இருப்பாங்க, எங்க பாத்தாலும் ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்லுகிறார். ஆனா சுரேகா நகை காணாமல் போனதற்கும் நந்தினிக்கும் தான் காரணம் இருந்திருக்கும் திருட்டு பசங்களை வைத்து இவளே நகையை திருடிட்டு அதை பங்க பிரிக்கும் போது பிரச்சனை வந்திருக்கும் அதனால அந்த திருட்டு பசங்க அம்மாவோட கார்ல அவள கட்டி போட்டு இருப்பாங்க என்று சுரேகா சொல்லுகிறார். உடனே மாதவியும் அதுவும் சரிதான் தோணுது என்று சொல்லுகிறார். எல்லாம் இவராலதான் என்று சொல்லி இனிமேல் இது மாதிரி யோசிக்காதீங்க இவர் போலீஸ்க்கு போனதுனால தான் அவ வீட்டை விட்டு வெளியே போனா இதுக்கு மேல நடக்குதுன்னு பாத்துக்கலாம் என்று சொல்லி மூவரும் உள்ளே சென்று விடுகின்றனர்.

மறுபக்கம் அருணாச்சலம் சூர்யா மற்றும் நந்தினியை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார். சூர்யா எதுக்கு டாடி என்று கேட்க உங்களுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து எந்த நல்லது விஷயமே நடக்கல எப்ப பாத்தாலும் சண்டை சச்சரவு பிரச்சனை இருக்கு அதனாலதான் என்று சொல்லுகிறார். சூர்யா எதுவும் வேண்டாம் என்று சொல்லுகிறார்.அதுவும் இந்த பிரச்சனைக்காக சொல்றீங்க பாத்தீங்களா என்று சொல்லுகிறார். அக்யூஸ்ட் யாருன்னு எனக்கு தெரியும் என்று சூர்யா சொல்லுகிறார். உடனே நந்தினி இடம் கோவிலுக்கு போலாமா என்று கேட்க போலாம் அய்யா என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவிடம் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வா என்று சொல்ல எனக்கு தெரியாது டாடி என்று சொல்லுகிறார் உடனே நந்தினி அனுப்பி நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அவர்களைப் பார்த்து அருணாச்சலம் எவ்வளவு பொருத்தமான ஜோடி இவங்க ரொம்ப சந்தோஷமா வாழனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். பிறகு அருணாச்சலம் அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் வருகிறார். இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லி என்ன சூர்யா என்று கேட்க ஆமா டாடி என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் நான் ஒரு சராசரியான பொண்ணு இந்த பணக்கார வீடு வாழ்க்கை எனக்கு எதுவும் வேண்டாம் என்று நந்தினி கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

அருணாச்சலம் நண்பர் ஒருவரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் நீ வீட்டை விட்டு எதற்கு பணம் தெரிஞ்சா தானே நான் யோசிக்க முடியும் என்று கேட்க, உங்களால தான் போன என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

moondru mudichi promo update 03-12-2024
moondru mudichi promo update 03-12-2024