தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அர்ச்சனா குடித்துவிட்டு கல்யாணத்தில் நடந்ததை நினைத்துக் நினைத்துக் கொண்டே கையில் இருக்கும் பாட்டிலை தூக்கி எறிகிறார். சத்தம் கேட்டு வந்த அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவரும் என் அர்ச்சனா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன் நைட் புல்லா குடிச்சுக்கிட்டு இருந்தியா என்று கேட்கின்றனர். கையில் ரத்தம் வருவதை பார்த்து இருவரும் பதற ஏமா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று அர்ச்சனாவின் அப்பா கேட்கிறார். இந்த ரூம்ல பார்க்கும்போது உங்களுக்கு என்னபா தோணுது,சூர்யா வந்தபோது உங்களுக்கு குடிக்கணுமா நீங்க வெளிய போகத் தேவையில்லை மாப்பிள்ளை இங்கேயே குடிச்சுக்கலாம் என்று சொன்னீங்க இல்ல ஆனா இப்போ இந்த ரூமுக்குள்ள வந்தா எனக்கு அந்த ஞாபகம் தான் வருது. என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருந்தான் அப்பா, நான் அத்தனை தடவை ஐ லவ் யூ சொல்லி இருக்க ஆனால் என்ன முட்டாள் ஆகிட்டா, ஆனா ஒரு தடவ கூட அவன நான் லவ் யூ சொல்ல விட்டதில்லை, அவன் முழுசா என் சூர்யா எனக்கு கிடைச்சதுக்கு அப்புறம் சொல்லணும்னு ஆசைப்பட்டேன் என்று சொல்லுகிறார் ஆனால் இப்போ அந்த இடத்தில ஒரு வேலைக்காரி இருக்கா அதை எப்படி என்னால தாங்கிக்க முடியும் என்று கேட்கிறார். இப்போ எனக்கு கரெக்டான நேரத்துல கல்யாணம் ஆகி இருந்தா இப்ப என் பக்கத்துல சூர்யா இருந்திருப்பான் இல்லப்பா என்று பேசுகிறார்.
நீங்க என்னோட பிறந்த நாளை வருஷம் வருஷம் எவ்வளவு கிராண்டா கொண்டாடுவீங்க ஆனால் இந்த வருஷம் நான் சூர்யா கூட மட்டும் தான் கொண்டாடணும்னு அவன தனியா கூட்டிட்டு போய் கொண்டாடினேன் ஆனா அப்ப கூட எனக்கு எந்த டவுட்டுமே வரல என் கூட அவ்வளவு நெருக்கமா கொஞ்சி பேசிக்கிட்டு இருந்தா அப்புறம் எப்படி என் கழுத்துல தாலி கட்டாமல் போன நான் என்னப்பா தப்பு பண்ண என்று கேட்க, ஆமாடி நீ தான் தப்பு பண்ணி இருக்க என்று அர்ச்சனாவின் அம்மா கோபமாக பேசுகிறார். உன்னோட திமிரு இவரோட சப்போர்ட் இருந்தா உன்னை இப்படி கூட்டிட்டு வந்து நிக்க வச்சிருக்கு. அந்தப் பையன் வந்த அப்பவே என்ன கல்யாணம் பண்ணா உன் லைப் கெட்டுப் போயிடும் என்று சொல்லியும் பண்ணது நம்மளோட தப்பு என்று சொல்ல அர்ச்சனாவின் அப்பா செல்வராணியை மிரட்டுகிறார். என் பொண்ணுக்கு எது சரின்னு தோணுதோ நான் அதை செய்வேன் என்று சொல்ல உங்க மேல தப்ப வச்சுக்கிட்டு குரலை உயர்த்தி பேசாதீங்க என்று பேச இங்க இருந்து நீ முதல்ல கிளம்பு என்று அவரை அனுப்பி வைக்கிறார். பிறகு அர்ச்சனாவிடம் தேர்தல்ல தோத்துப் போயிட்டா கூட நான் பெருசா நினைச்சுக்க மாட்டேன் ஒரு தேர்தல் இல்லன்னா அடுத்த தேர்தலில் ஜெயிச்சுக்கலாம் ஆனா ஒரு அப்பாவா நான் என்னைக்குமே தோத்து போக மாட்டேன் தைரியமாக இரு அர்ச்சனா அப்பாவ நம்பர இல்ல என்று சொல்லிவிட்டு போய் படு என்று அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் சிங்காரத்தை அனுப்பிவிட்டு அருணாச்சலம், நந்தினி, மாதவி மற்றும் மாதவியின் கணவர் என நால்வரும் வீட்டுக்கு வருகின்றனர்.அருணாச்சலம் அவர்களிடம் சிங்காரத்திற்கு நடந்த விஷயத்தையும், ஹாஸ்பிடலுக்கு போனதையும் சுந்தரவல்லிக்கு சொல்ல வேணாம் என்று மாதவி சொல்ல முதல்ல அவர் கிட்ட சொல்லுங்க என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி மேலே போக மாதவி இவங்களால என் தூக்கமே போயிடுச்சு என்று சொல்ல மாதவி கணவர் என்னதான் இருந்தாலும் பணக்கார வீட்டுல வேலைக்காரியா இருந்து இப்போ மருமகளா ஆகி இருக்க பாக்கியம் கிடைச்சிருக்கு என்று சொல்ல ஆயிரம் தான் களிமண்ணை லாக்கரையில் வைத்தாலும் அது தங்கமாகாது இவ எப்பவுமே வேலைக்காரி தான் என்று மாதவி சொல்லுகிறார். ரூமுக்குச் சென்ற நந்தினி சூர்யா படுத்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்து விடுகிறார். ஊரில் நடந்த பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். மாதவி மாதவியின் கணவரும் மேலே வர நந்தினி வெளில உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, உள்ள போக சொல்ல வேணாம்மா இங்கேயே இருக்க என்று சொல்லுகிறார் உடனே மாதவி நேத்து வரை வேலைக்காரியா இருந்துட்டு இன்னைக்கு தாலி கட்டினா அப்படித்தான் இருக்கும் நீயும் இந்த வீட்டு மருமகளா வாழப்பழகிப்போ என்றெல்லாம் நல்லவள் போல் வேஷம் போட்டு ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார்.
உடனே மாதவியின் கணவர் நீ அவகிட்ட பாசமா பேசினது நடிப்புன்னு தெரியும் ஆனா எதுக்கு உள்ள அனுப்பி வைத்திருக்க என்று கேட்க அவர் சூர்யாவோட நிழல்ல இருந்தா மட்டும் தான் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது என்னன்னா எங்க அம்மா சுந்தரவல்லி வீட்ட விட்டு தொறத்துவாங்க என்று சொல்லுகிறார்.உடனே மாதவியின் கணவர் அப்போ புரியல இப்போ புரியுது என்று சொல்லுகிறார். மீண்டும் அது சரி அப்போ இவங்க ரெண்டு பேரும் சகஜமா பேசி ஒன்னாகி குழந்தை பிறந்தது என்றால் என்ன பண்ணுவ என்று கேட்க, எதையுமே பிளான் பண்ணாம பண்ண மாட்ட இந்த மாதவி என்று சொல்லுகிறார். அப்படியே நடந்தாலும் அதை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அவரை கூட்டிச் செல்கிறார்.
மறுநாள் காலையில் சூர்யா எழுந்து கொண்டு பார்க்கும் போது என் ரூம்ல யாரு இருக்கிறது என்று பார்த்துவிட்டு பிறகு உத்து பார்த்து யாழினி என்று சொல்லுகிறார். நான் கட்டின தாலி நான் கட்டுன தாலி என்று சொல்லிவிட்டு நைட்டு ஃபுல்லா இப்படியே தான் உட்கார்ந்திட்டு இருந்தியா எதுவும் பேச மாட்டியா என்று கேட்கிறார். எதுக்கு பேய் அறைந்த மாதிரி இருக்க உனக்கு இந்த வீட்ல எந்த டிஸ்டபன்ஸும் இல்ல ஜாலியா இரு, இந்தத் தாலி எல்லாம் எங்க அம்மாவ வெறுப்பேத்தறதுக்காக மட்டும்தான் என்று சொல்லுகிறார். உங்க அம்மாவை வெறுப்பேத்தணும்ன்றதற்காக ஒரு ஏழை பொண்ணு கழுத்துல தாலி கட்டுனீங்களே அப்ப அவளோட மனசு என்ன கஷ்டப்படும் நினைச்சீங்களா. என்று கோபமாக பேச இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் என் ஆசை கனவு எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போயிடுச்சு. சூர்யா சாருக்கு என் மேல எந்த அக்கறையும் இல்லைன்னு நினைச்சேன் ஆனா சுந்தரவல்லி அம்மாவோ மத்தவங்களோ என்ன விட்டு துரத்தும் போது எனக்காக வந்து நின்னாரு. சுந்தரவல்லி அம்மாவோட பொறுப்பை மட்டும் சம்பாதிச்சாங்க எப்படி இருக்க போறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.