தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நான் இந்த புடவை எல்லாம் கட்ட மாட்டேன் வீட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது என்று நந்தினி சொல்ல சூர்யா நீ வீட்டு வேலையெல்லாம் செய்யவே கூடாது. அதுக்கெல்லாம் வேலைக்காரங்க இருக்காங்க நீ இந்த வீட்ல ஜாலியா இரு என்று சொல்லுகிறார். அது மட்டும் முடியாது நான் இந்த வீட்ல வேலைக்காரியா தான் இருக்கேன். ஆனா ஒன்னு நான் உங்க வீட்டு தோட்டத்துல வேலை பாக்கும்போது என்ன சம்பளம் கொடுத்தீங்களோ அதே மாதிரி இந்த வீட்ல வேலை செய்யறதுக்கும் அதே சம்பளத்தை எனக்கு கொடுத்துடுங்க என்று சொல்ல சூர்யா உனக்கு எவ்வளவு வேணும் எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ எல்லாமே உனக்கு தான் என்று சொல்லுகிறார்.
ஆனா ஒன்னு நான் இந்த புடவை எல்லாம் கட்ட மாட்டேன் தயவு செய்து என்னை எங்கேயோ கூப்பிடாதீங்க, என்று கோபமாக சென்று விட சூர்யா மாலினி மாலினி என கூப்பிட்டும் அவர் கிளம்பி விடுகிறார். கிச்சனில் கல்யாணம் பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்க, பாத்திரம் கழுவ கஷ்டமா இருக்கா அண்ணன் என்று வேலை செய்யும் பெண் பேசிக் கொண்டிருக்க, நீ அண்ணன்னு சொல்றதுதான் கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி வந்து நான் பாத்திரம் கழுவுறேன் நீங்க விடுங்க என்று சொல்ல எதுக்குமா ஏற்கனவே விழுந்து அடியே தாங்க முடியல இத பாத்துட்டு ஐயா வந்து என்னை அடிக்கவா விடுமா என்று சொல்லுகிறார். உடனே வேலை செய்யும் பெண் காய்கறி வெட்டுவதை விட்டு கிளம்ப நான் காய்கறி வெட்டுகிறேன் என்று நந்தினி வேலை செய்கிறார். கல்யாணம் நந்தினியிடம் உனக்கு ஏற்கனவே சின்னவர் தெரியும்மா அம்மா என்று கேட்கிறார். நந்தினி தெரியாது என்று சொல்ல சரி இதுக்கப்புறம் அது கேக்குறதுல புரோஜனம் இல்லை என்று சொல்லுகிறார். பிறகு மாதவியும், சுரேகாவும் கிச்சனில் இருக்கும் நந்தினியை கூப்பிடுகின்றனர். உனக்கு எடுத்த புடவை எல்லாம் அக்காவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதே மாதிரி நாங்க எடுக்கணும் அந்த புடவை எல்லாம் எங்க இருக்கு என்று கேட்க ரூமில் தான் இருக்கு என்று சொல்லுகிறார். சரி மேலே போகலாம் என்று கிளம்ப அந்த புடவை எல்லாம் நான் கட்டவே மாட்டேன் வழுவழுன்னு இருக்கு அதுக்கு பதில் நீங்களே இந்த புடவை எல்லாம் எடுத்துக்கோங்க என்று சொல்ல, நான் சொன்னேனு தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்ல அதெல்லாம் வேணாம் நான் பாத்துக்கிறேன் என்று மாதவி சொல்லுகிறார்.
கல்யாணம் சின்னையா கொடுத்த புடவை எல்லாம் அவங்கள எடுத்துக்க சொல்லிட்டா நீ என்னமா பண்ணுவ என்று கேட்க அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்று சொல்கிறார். பிறகு கல்யாணத்திடம் உதவி கேட்டு, எனக்கு நூல் புடவை தேவைப்படுது எடுத்து தரீங்களா நான் அப்புறமா காசு தரேன் என்று சொல்ல, உடனே கல்யாணம் கண்கலங்கி அண்ணன் இருக்கும்போது ஏமா காசு தரலாம் பேசுற உனக்கு என்ன புடவை தானே வேணும் நானே போய் இப்பவே எடுத்துட்டு வரேன் என்று சொல்லி உடனே கிளம்புகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போட்டு, நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க, ஊர்ல வீடு தோட்ட துறவு எல்லாமே நீங்க தான் பாத்துக்கணும் இனிமேல், என்று சொன்னவுடன் அதுக்காக தான் நான் காத்துகிட்டு இருக்கேன் என்று சொல்லி சிரிக்கிறார். உடனே அந்த வேலைக்கார குடும்பத்தை விரட்டி அடிக்கணும் இனிமே நீங்கதான் பொறுப்பு ஏத்துக்கணும் என்று சொல்ல, ஏற்கனவே நம் ஆட்டம் பெருசா இருக்கும் இதுல நீங்க சலங்கை வேற கட்டி விட்டுட்டீங்க, நான் முடிச்சுட்டு கால் பண்றேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
அருணாச்சலம் எதுக்கு இந்த மாதிரி தேவையில்லாத வேலை பண்ணிக்கிட்டு இருக்க என்று சுந்தரவல்லி இடம் சொல்ல இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க உங்களால தான் இவ்வளவு தூரம் வந்து நின்னு இருக்கு என்று சொல்ல சூர்யா பண்ண தப்பு அவங்க என்ன பண்ணுவாங்க. இவ்வளவு நாளா தோப்புல வாழ்ந்துட்டு திடீர்னு வெளிய போக சொன்னா எங்க போவாங்க, என்று சொல்ல, போய் பிச்சை எடுக்கட்டும் என்று சொல்கிறார் சுந்தரவல்லி. அதுவும் இல்லாம ஏற்கனவே சுதாகர் நம்ம தோப்புல திருடி இருக்கான். இவங்க மேல இருக்கிற கோவத்துல அவன்கிட்ட என் பொறுப்பை கொடுக்குற என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக பேசி அவரை அனுப்பி வைக்கிறார். சுதாகர் ஆட்களுடன் வந்து அனைவரும் உள்ளே போய் இருக்கிற சாமான்கள் எல்லாத்தையும் வண்டியில ஏத்து என்று சொல்ல சிங்காரம் குடும்பத்தினர் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியாகின்றனர். பிறகு சுதாகரை மிரட்டும்படி அம்மாச்சி பேச அவ்வளவு தைரியம் வந்துருச்சா உங்களுக்கு என்று பேசுகிறார்.
குடும்பமா சேர்த்து பொண்ணு அனுப்பி வச்சு திருட்டு கல்யாணம் பண்ணது இல்லாம என் பங்காளி சொத்து அமுக்க பாக்கறீங்களா என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். சிங்காரம் என் வீட்டு காலி பண்ண நீ யாரு என்று கேட்க உடனே சுதாகர் நீ அண்டி பொழைச்சுக்கிட்டு இருக்க இங்க வந்து உன் வீடு உன் வீடுன்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று மிரட்டுகிறார். இனிமே இந்த வீடு தோட்டம் எல்லாம் என்னதான் பாத்துக்க சொல்லி இருக்காங்க. உங்களுக்கும் இந்த இடத்துக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்லை ஓடிப் போயிடுங்க என்று சொல்லுகிறார். பொருட்களை எடுத்து வைப்பவர்களிடம் அம்மாச்சி கெஞ்சி கேட்டு எடுத்து வைக்காதீர்கள் என்று அழுகிறார். சிங்காரம் சுதாகரிடம் உங்களுக்கு இனிமேல் அவ்வளவுதான் மரியாதை இந்த தோப்பில் ஒரு ஒரு செடியும் மரமும் நானும் என் பொண்ணு வளர்த்திருக்கோம் என்று கோபமாக பேசுகிறார். உங்கள துரத்தி விட்டுட்டு எல்லா தோப்பையும் எங்க கண்ட்ரோல்ல வச்சுக்க சொல்லி இருக்காங்க என்று சுதாகர் சொல்லுகிறார். அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டாரு நீ பொய் சொல்ற என்று சொல்ல நானே போன் போட்டு தரேன் பேசு எப்பவுமே என்ன கெட்டவனாகவே பாக்கறீங்க என்று போனை போடுகிறார்.
அவர் உடனே சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். இவங்க நான் சொன்னா நம்ப மாட்டாங்க நீங்களே சொல்லுங்க என்று சிங்காரத்திடம் ஃபோன் கொடுக்க உடனே சுந்தரவல்லி சுதாகர் அவங்க கிட்ட ஒரு நிமிஷம் கூட பேச அவங்க ஒன்னும் பெரிய ஆள் கிடையாது அவங்கள கழுத்த புடிச்சு வெளியே தள்ளுங்க என்று சொல்லி போனை வைக்க குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்குகின்றனர். தரிசா கிடந்த நிலத்த குடும்பமா வளர்த்து தோப்பாகின மனசாட்சியே இல்லாம வெரட்டி அடிக்கிறீங்களே மனசாட்சியே இல்லையா என்று கேட்கிறார். சுதாகரிடம் பத்து நாள் அம்மாச்சி டைம் கேட்க பத்து நாளா பத்து நிமிஷம் தான் இங்கே இருக்கணும் அதுக்கு மேல இங்க இருந்திங்கனா இங்க என்ன நடக்கும் எனக்கே தெரியாது என்று மிரட்டி விட்டு செல்கிறார். அக்கா வாழ்க்கையே நாசம் பண்ணிட்டு நம்மளையே இப்படி துரத்துறாங்களே அவங்களுக்கெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லையா என்று கேட்க நம்ம இப்ப என்னப்பா பண்ண போறோம் என்று சொல்ல கருப்பன் நம்மளுக்கு வழி காட்டுவான் என்று சொல்ல இந்த விஷயம் நந்தினிக்கு தெரிய வேணாம் என்று சொல்லுகிறார் சிங்காரம். பிறகு வண்டியில் ஏரி அனைவரும் கிளம்பி விடுகின்றனர்.
பிறகு நந்தினி கிச்சனில் தேங்காய் உடைக்க தேங்காய் அழுகியிருக்கிறது. இத பாத்தா கல்யாணம் என்னமா தேங்காய் அழுகியிருக்கு, கெட்ட சகுனம் சொல்லுவாங்களே அம்மா என்று சொல்ல நந்தினியும் எனக்கும் கெட்ட கெட்ட கனவா வருது என்ன பிரச்சனை தெரியல நான் ரொம்ப பயமா இருக்கு. இந்த கல்யாணத்துக்கு அப்புறம் வீட்ல இருந்து யாருமே போன் பண்ணல என்று சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு இப்ப என்ன போன் பேசணும் அவ்வளவு தானே என்று சொல்லிவிட்டு கல்யாணம் போனை நந்தினியிடம் கொடுத்து பேசுமா என்று சொல்லுகிறார். நந்தினியின் தங்கை போனை வைத்துக் கொண்டிருக்க சிங்காரம் யார் என்று கேட்டால் நந்தினி அக்கா தான் போன் பண்றா, என்று சொல்ல சிங்காரம் போனை எடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார் அக்கா என்ன பிரச்சனைக்காக நமக்கு பண்ணுதோ தெரியலையேப்பா என்று சொல்ல நம்ப நந்தினி கிட்ட பேசினா உடைந்து அழுதுருவோம் வேணாமா என்று சொல்லி வைத்து விடுகிறார் .என்ன பிரச்சனை இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் வச்சிட்டு என்று சொல்ல அவரும் போனை எடுக்காமல் விட்டுவிடுகிறார். பிறகு சூர்யாவிடம் வந்தார் அருணாச்சலம் என்னடா நந்தினிக்கு புடவை எல்லாம் எடுத்து கொடுத்திருக்க போல என்று சொல்ல ஆமாம் டாடி நீங்க தானே நல்லா பாத்துக்கணும்னு சொல்லி இருக்கீங்க என்று சொல்ல அது மட்டும் இல்லாம அவங்க அம்மாவ வெறுப்பேத்துவதற்காக மட்டும் பாசம் காட்டாமல் அவகிட்ட உண்மையாவும் நடந்துக்கோ என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரம் கழித்து ரூமில் இருந்து பாயுடன் வெளியே வருகிறார் நந்தினி. இதனைப் பார்த்து சூர்யா மாலினி மாலினி என்று கூப்பிட அவர் நிற்காமல் போக அருணாச்சலம் நந்தினி என கூப்பிட்டவுடன் நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நந்தினியை பார்க்க சிங்காரமும் அவர்களது குடும்பத்தினரும் வருகின்றனர். நந்தினி ஓடிவந்து அவர்களது தங்கையை கட்டிப்பிடித்து அழுகிறார். இந்த கல்யாணத்தை பத்தி ஊருல எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இல்லப்பா என்னப்பா பேசிக்கிறாங்க எல்லாரும் என்று கேட்கிறார்.
உடனே அம்மாச்சி நீ சொல்ற மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் எந்த முடிவும் எடுக்க முடியாதுமா என்று சொல்லுகிறார் இதனால் நந்தினி கண்கலங்குகிறார். நானே இங்க ஆறு மாசம் என்ன சொன்னதுனால தான் இருக்கேன் என்று சொல்ல உடனே அம்மாச்சி என்னடி சொல்ற என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.