Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி கொடுத்த ஷாக், சூர்யாவின் பதில் என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

moondru mudichi serial promo update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினியும் குடும்பத்தினரும் கிராமத்து பலகாரங்களை வீட்டின் வெளியே அடுப்பு பற்ற வைத்து செய்கின்றனர். உடனே அருணாச்சலம் அங்கு வர வாசன கமகமன்னு இருக்கு என்று சொல்லுகிறார். நானும் சின்ன வயசுல அப்படி தான் எங்க அம்மா அப்படி பலகாரம் செய்யும் போது நாங்க அடுப்பை ச
சுத்தி உக்காந்துக்கிட்டு இருக்கோம் எழுந்தே போக மாட்டோம் ஆனால் இந்த வீட்ல இப்பதான் பலகாரம் செய்யறது முதல் தடவை என்று சொல்லுகிறார். நந்தினி சோகமாக இருக்க அருணாச்சலம் என்னவென்று கேட்கிறார். நீங்க கை விடுவீங்கன்னு நினைக்கல ஐயா அவ்வளவு நாளா தோப்புல வேலை செஞ்சிருக்கோம், ஆனா நீங்க எங்க குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டி அடிச்சு இருக்கீங்க நீங்க இப்படி ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். உடனே சிங்காரம் ஏன் இப்படி மரியாதை இல்லாம பேசுற நந்தினி என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் உங்க குடும்பத்தை கைவிடணும்னு நினைக்கல ,அன்னைக்கு பேசும்போது நான் பக்கத்துல தான் இருந்தேன்,ஆனா அவ கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல உடனே அந்த வீடு தெரிஞ்சவங்க மூலமா அரேஞ்ச் பண்ணி கொடுத்த என்னால் அதுதான் பண்ண முடியும் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் கண் கலங்கி, உதவி பண்ண குலசாமி நீங்கதானாயா என்று அழுகிறார். உடனே சிங்காரம் ஐயா,நம்ம குடும்பத்து கைவிட மாட்டாருமா என்று சொல்ல நந்தினியும் அருணாச்சலத்திற்கு நன்றி சொல்லுகிறார்.

ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க உங்களுக்காக நான் எப்பவுமே இருப்பேன் என்று சொல்லுகிறார். சரி எல்லாரும் சோகமா இருக்க வேண்டாம் இந்த வருஷ தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம் என்று சொல்லுகிறார். உடனே வெளியில் வந்த சுந்தரவல்லி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க அருணாச்சலம் சுந்தரவல்லி கூப்பிடுகிறார். தீபாவளிக்கு முன்னாடி இப்படி பலகாரம் பண்றது தான் நம்ம ஊரோட வழக்கம் நீயும் வந்து பண்ணு தெரியலனாலும் பரவால்ல கத்துக்கலாம் என்று சொல்ல அவர் எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார். மீண்டும் அருணாச்சலம் பலகாரம் சுடும் இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த அசோகன் ஸ்வீட் மோப்பம் பிடித்து எழுந்து வெளியே வருகின்றனர். உடனே பின்னாடியே சுரேகாவும் வந்து தூங்கவே முடியல நல்ல வாசனை வருதுகா என்று வருகிறார். அப்படி என்ன செய்றாங்க என்று கேட்க சரி வாங்க போய் பார்க்கலாம் என்று மூவரும் வருகின்றனர்.

ஆனால் யார் போய் கேட்பது என்பதில் கூச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு மாதவியின் சுரேகாவும் அசோகனை அனுப்புகின்றனர். அவரும் வந்து வாசன என்ன தூங்க விடாம எழுப்பி விட்டுருச்சு மாமா என்று சொல்லுகிறார்.

உடனே அசோகன் ஒரு முறுக்கு தொட ரஞ்சிதா கை வைக்காதீங்க சாமி கும்பிட்டு தான் சாப்பிடணும் இல்லனா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லுகிறார். அனைவரும் அப்படி தான் செய்யணும் என்று சொன்னால் அம்மாச்சி தீபாவளி அதுவும் பொண்டாட்டியெல்லாம் புருஷனுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கணும் என்று சொல்ல, அசோகனும் சரியான சொல்லுகிறார். பிறகு அம்மாச்சி சூர்யா தம்பி கூட்டிட்டு வந்து என்ன தேச்சு குளிக்க வை என்று சொல்ல நந்தினி மறுக்கிறார். பிறகு அனைவரும் சொல்ல நந்தினி சரியென சம்மதிக்கிறார். பிறகு சூர்யாவின் ரூமுக்கு வந்த நந்தினி அவரை எழுப்ப முயற்சி செய்ய சூர்யா எவ்வளவு நேரம் எழுப்பியும் எழுந்துக்காமல் இருக்க பிறகு எழுந்து கொள்கிறார்.

என்ன மாலினி எதுக்கு எழுப்புற என்று கேட்க, அங்க உங்கள கூப்பிடுறாங்க எழுந்து வாங்க, என்று சொல்ல எனக்கு தூக்கம் வருது மாலினி என்று சொல்லுகிறார்.எழுந்து வாங்க சார் என்று சொல்லுகிறார். யார் என்று கேட்க ஐயா எல்லாரும் தான் என்று சொல்லிவிட்டு எதுக்கு என்று கேட்க நந்தினி குளிக்கணுமா என்று சொல்லுகிறார். இந்த மிட் நைட்ல குளிக்க கூப்பிடறாங்களா என்று கேட்கிறார் ஆமாம் எனக்கு அதெல்லாம் தெரியாது வாங்க என்று கூப்பிட்டு செல்கிறார். பிறகு அம்மாச்சி அண்டாவில் தண்ணியை வைத்து காய்ச்சிக் கொண்டிருக்க சூர்யா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க எண்ணெய் தேச்சு குளிக்கணும் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு வேணாம் என்ற கிளம்புகிறார். அருணாச்சலம் அவரை தடுத்து நிறுத்தி தீபாவளி அன்னைக்கு சாமி கும்பிடணும் போய் குளி என்று சொல்லுகிறார். உடனே அம்மாச்சி தண்ணி ரெடியாயிடுச்சு யார் யார் குளிக்கணுமோ குளிங்க என்று சொல்ல உடனே அசோகன் அவங்க அவங்க பொண்டாட்டி தான் வந்து தண்ணி ஊத்தணுமா நான் போய் உங்களுக்கு அத்தையை கூப்பிட்டு வரவா மாமா என்று சொல்ல எதுக்கு பலகார சுட்ட என்னைய தூக்கி என் தல மேல ஊத்தவா என்று அருணாச்சலம் கேட்டு அவரை நிறுத்தி வைக்கிறார்.

உடனே அம்மாச்சி சூர்யா தம்பி உட்கார வச்சு குளிக்க வைமா என்று நந்தினியிடம் சொல்ல நான் என்ன ஸ்கூல் பையனா அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல சூர்யாவை அருணாச்சலம் சம்மதிக்க வைக்கிறார். வேறு வழியில்லாமல் நந்தினியும் சூர்யாவிற்கு தலையில் எண்ணெய் தேய்த்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் என் குடும்பம் என்னால ரொம்பவே அவமானப்பட்டுட்டாங்க என்று நந்தினி சொல்கிறார். நந்தினி குடும்பத்தினர் அனைவரும் இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க உங்களுக்கு எல்லாம் இலை விருந்து கேக்குதா என்று இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இலைகளை தூக்கி வீசுகிறார்.

சுந்தரவல்லி அவர்களை அசிங்கப்படுத்தி பேச இந்த விஷயம் சூர்யாவிற்கு தெரிய வருகிறது. இதனால் வீட்டில் பிரச்சனை வர, சூர்யா சார், எங்க பக்கம் நிக்கிறாரு.. ஆனா எங்க மேல முழுசா வெறுப்பை காட்டும் சுந்தரவல்லி அம்மா முன்னாடி என் வாழ்க்கை மீது எப்படி வாழ போறேன் என்று சொல்லுகிறார் நந்தினி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

moondru mudichi serial promo update