தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சரோஜாவை பற்றி விசாரிக்க கல்யாணம் அத ஏன் ஐயா கேக்குறீங்க முதல்ல ஒரு நாள் லீவுன்னு சொல்லிட்டு இப்ப ஒரு வாரம் லீவுன்னு சொல்லி இருக்கா அதுக்கு பதில் தான் புஷ்பா என்ற இந்த பொண்ண அனுப்பி இருக்கா என்று சொன்னா சரி போய் வேலையை பாருங்க என்று அருணாச்சலம் சொல்லி அனுப்பி வைக்கிறார். ரிசப்ஷன் முடிந்தவுடன் சூர்யா குடித்துக் கொண்டு வர ரூமில் கிப்ட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நந்தினி. மாலினி என்ற கூப்பிட்டு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல சின்னம்மா தான் இதெல்லாம் எடுத்து வைக்க சொன்னாங்க என்று சொல்ல யாரு அந்த சின்னம்மா என்று கேட்கிறார் அதுக்கு அவங்க என்று ஆரம்பிக்க அது யாருவேனா இருந்துட்டு போகட்டும் ரிசப்ஷன் எப்படி இருந்தது என்று சூர்யா கேட்கிறார். சூப்பரா இருந்துச்சு சார். நீங்க நம்பிக்கை இல்லாம வந்திங்க ஆனால் கருப்பசாமி சொன்ன மாதிரி நடந்துச்சு பாத்தீங்களா என்று பேசிக் கொண்டிருக்க அதனை சுதாகர் பார்த்து கடுப்பாகிறார். சரி போனுக்கு சார்ஜ் போட்டு வைங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.இவன் என்ன வேலைக்காரி கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்கான் சரியில்லையே என்று யோசிக்கிறார்.
பிறகு அர்ச்சனா தோழிகளுடன் வர அதில் ஒருவர் பரவாயில்லையே சூர்யா உனக்காக இவ்ளோ பண்ணிருக்கான் என்று சொல்ல என் அப்பா அசிங்கப்பட்ட இடத்தில் சூர்யா பேசும்போது சந்தோஷமாக இருந்தது என்று பேசிக் கொண்டிருக்கிறார். தோழி ஒருவர் இருந்தாலும் நீ அவங்க ரெண்டு பேர் கிட்ட கொஞ்சம் உஷாரா இரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி மற்றும் சுரேகா இருவரும் ரிசப்ஷனை முடிஞ்சிருச்சு இன்னும் நம்மளால எதுவுமே பண்ண முடியல அக்கா ஏதாவது பண்ணுக்கா என்று சொல்லுகிறார். அது தாண்டி எனக்கும் புரியல விடிஞ்சாக்கா கல்யாணமே நடந்துரும் போல என்ன பண்றதுன்னு தெரியல என்று பேசிக்கொண்டு அங்க சார் இருக்கு உட்காரலாம் வா என்று கூப்பிடுகிறார்.
உடனே அர்ச்சனாவின் தோழி வந்து எங்க மேடம் உட்காரனும் என்று சேரை எடுக்க யார் என்று கேட்க அர்ச்சனாவை காட்டுகின்றனர். அர்ச்சனா ஒரு சேரில் உட்கார்ந்து, இன்னொரு சாரில் கால் மேல் கால் போட்டு பேசுகிறார். அர்ச்சனாவிடம் கேட்பது போல் ஒரு தோழி இவங்க ரெண்டு பேரும் உங்க வீட்டு வேலைக்காரியா அர்ச்சனா உங்க வீட்ல பார்த்ததே இல்ல என்று நக்கலாக பேசுகின்றனர். மற்றொருவர் இல்லனா சூர்யாவோட வீட்டு வேலைக்காரங்களா, சூர்யாவோட வீட்டுக்காரங்களை இவ்வளவு நகலா போட்டு இருக்காங்களா என்று மாதவி சுரேகாவை வெறுப்பேற்றுகின்றனர். உடனே அர்ச்சனா அவங்க வேலைக்காரங்க இல்ல சூர்யாவோட சிஸ்டர்ஸ் என்று சொல்ல சாரிங்க தெரியாம சொல்லிட்டோம் என்று நடிக்கின்றனர். மீண்டும் ஒருவர் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே இருந்தாலும் நீங்க வேலைக்காரி மாதிரி தான் இருக்கீங்க என்று சொல்ல சுரேகாவும் மாதவியும் கோபப்பட்டு கிளம்பி விடுகின்றனர். உடனே மினிஸ்டர் அர்ச்சனாவிடம் போலாமா என்று கேட்க எங்க டாடி என்று கேட்கிறார்.நீ தானமா இங்க ரூம் சரியில்ல பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் புக் பண்ண சொன்னேன் பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல புக் பண்ணி இருக்கேன் நைட் போயிட்டு ஸ்டே பண்ணிட்டு மார்னிங் கல்யாணத்துக்கு வரலாம் என்று அழைத்து செல்கிறார்.
மறுபக்கம் மாதவியின் கணவர் மற்றும் சூர்யாவின் நண்பர் இருவரும் மண்டபம் முழுவதுமாக சூர்யாவை தேடி அலைகின்றனர். ஒரு ஒரு ரூமையும் திறந்து பார்க்கின்றனர். ஆனால் எந்த ரூமிலும் சூர்யா இல்லை. சூர்யாவை தேடிக் கொண்டிருக்கும்போது சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலம் வந்து என்னாச்சு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க சூர்யாவை காணும் அந்த மண்டபம் ஃபுல்லா தேடிட்டோம் என்று சொன்னவுடன் சுந்தரவல்லி போன் பண்ணிங்களா மண்டபம் புல்லா தேடுனீங்களா என்று கேட்கிறார். இதை மாதவியும் சுந்தரவள்ளியும் கேட்டு வெளியே வந்து அண்ணா கல்யாண மண்டபத்தை விட்டு போயிட்டானா அம்மா என்று கேட்க சுந்தரவல்லி வாயை மூடு என்று சொல்லுகிறார்.ஃபுல்லா தேடி ஆச்சு என்று சொல்லி போன் பண்ண வில்லை என்று சொன்னவுடன் சுந்தரவல்லி அவரது ஃபோனில் சூர்யாவுக்கு போன் பண்ண போன் நந்தினி கையில் இருக்கிறது. உடனே சுந்தரவல்லி இது சூரியாவோட போன் உன் கைக்கு எப்படி வந்தது என்று கேட்க சூர்யா சார் தான் சார்ஜர் போட சொன்னாரு என்று சொல்லுகிறார். சார்ஜ் போட்டுட்டு யாராவது எடுத்துட்டு போய்ட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு நானே கையில வச்சிருக்கேன் என்று நந்தினி சொல்ல இது எங்களை நம்ப சொல்றியா என்று சுந்தரவல்லி கேட்கிறார். உடனே சுதாகர் வந்து இவர் பொய் சொல்றா அண்ணியாரே தம்பி ஏதோ இவ கிட்ட சொல்லிட்டு தான் போனாரு என்று போட்டுவிட அண்ணாமலை சுந்தரவல்லி ஏற்கனவே அவர் இந்த கல்யாணத்தை நிறுத்துவேன் உன்னை கோபப்படுத்தவும் அசிங்கப்படுத்தவும் அவன் என்னவெல்லாம் பண்ணுவான்.முதல்ல அவன கண்டுபிடிக்கிற வேலையை பார்ப்போம் என்று சொல்ல சுந்தரவல்லி வந்து விடுகிறார்.
மண்டபத்தின் வெளியே பதற்றமாக சுந்தரவல்லி நடந்து கொண்டிருக்க அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் கோவப்படுகிறார் அதுக்கு தான் முன்னாடி உன்கிட்ட சொன்ன அவன் கிட்ட கேட்டுட்டு எல்லாம் பண்ணு என்று சொல்ல சுந்தரவள்ளியும் நானும் கத்தும்னா கத்துவேன் கோபப்பட வைக்காதீங்க என் பொண்டாட்டி என் மாமனார்னு பேசிகிட்டு இருந்தா அதை நான் தான் சொன்னேனா கம்முனு இருங்க என்று அண்ணாமலை இடம் கோபப்படுகிறார். சுரேகா மாதவியிடம் அப்போ நிஜமாலுமே சூர்யா கல்யாண மண்டபத்தை விட்டு போயிட்டானா அதுக்கு தான் வேக வேகமா ரெடி ஆனானா என்று சுரேகா சொல்ல அதற்கு மாதவி விடு அவனே கல்யாணத்தை நிறுத்திடுவான் சும்மா தேடுற மாதிரி பில்டப் கொடுப்போம் என்று சொல்லுகிறார். நந்தினியிடம் சிங்காரம் என்னம்மா விடிஞ்சா கல்யாணம் இந்த நேரம் பார்த்து சின்னவரா காணோம்னு சொல்றாங்க அவருக்கு நிஜமாலுமே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா என்று கேட்க தெரியலப்பா நம்ம யார்கிட்ட என்ன கேட்கிறதுன்னே தெரியல பயமா இருக்கு என்று சொல்ல நம்ப உரிமையா கேக்குறதுக்கு ஒரே ஆளு கருப்பன் தான் என்று கடவுளிடம் இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கணும் விடியறதுக்குள்ள சின்னவரு மண்டபத்துக்கு வந்துடனும் என்று சிங்காரம் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.
அருணாச்சலம் மாதவியின் கணவரிடம் மேல பார்ட்டி நடந்தது அங்க நல்லா பாத்தீங்களா என்று கேட்க பாத்துட்ட மச்சான் என்று சொல்ல சுந்தரவல்லி இன்னும் கோபப்படுகிறார் இது மாதிரியான ஆள வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு அவரே மேலே சென்று பார்க்க பவுன்சர் அனைவரும் குடித்துவிட்டு போதையில் படுத்து கிடக்கின்றனர். இவங்கள சூர்யாவ பாத்துக்க சொன்னா இவங்க என்ன இப்படி இருக்காங்க என்ற கோபப்பட்டு கீழே இறங்கி வருகிறார். நல்லவேளை சம்மந்தி வீட்ல இங்க இல்ல இருந்திருந்தால் எவ்வளவு அசிங்கமா இருக்கும் என்று சொல்ல இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல சூர்யா அங்க வந்து இருக்கானா பேசுனானா என்று போன் பண்ணி கேட்கலாம் என்று அண்ணாமலை சொல்ல வேண்டாம் என சுந்தரவல்லி மறுத்து கூறுகிறார். இதை எவ்வளவு நேரம் மெயின்டைன் பண்ண முடியும் என்று அண்ணாமலை கேட்க சுந்தரவல்லி யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நான் இல்லாத கொஞ்ச நேரம் எங்க அம்மா ஆடிப் போயிட்டாங்க.. அர்ச்சனாவுக்கு தெரியாது இது எதுவும் நிலைக்க போறது கிடையாது என்று, என் அக்காவும் என் மனச மாத்த பாக்குறாங்க.
மாதவி சூர்யாவிடம் நீ அர்ச்சனா கழுத்திலேயே தாலி கட்டு என்று சொல்லுகிறார். என்ன நடந்தாலும் நான் மாறப்போறது கிடையாது. இவங்க எல்லாருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கு என்று பேசுகிறார் சூர்யா. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்..