Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவை மிரட்டிய சுந்தரவல்லி, அருணாச்சலத்திடம் அழுத சிங்காரம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

moondru mudichi serial promo update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அப்பா அம்மாவிற்கு பாத பூஜை செய்ய ,அவர்கள் அர்ச்சனாவை ஆசீர்வாதம் செய்கின்றனர். பிறகு அரசாணிக்கால் வைக்கும் சாம்பிரதாயம் நடக்கிறது. பிறகு சுரேகா ஆட்டத்தை ஆரம்பிக்க ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக மாப்பிள்ளை பெண்ணை வரவேற்கின்றனர். உடனே மாப்பிள்ளையும் பெண்ணும் சூப்பராக டான்ஸ் ஆடி சந்தோஷப்படுகின்றனர். மீண்டும் சூர்யா அர்ச்சனாவை இழுத்து இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர். அர்ச்சனா வெக்கப்பட்டு சூர்யாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். பிறகு இருவரும் மண மேடையில் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு உட்காருகின்றனர்.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க நந்தினி அப்பா கருப்பா இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்று வேண்டிக் கொள்கிறார். மாங்கல்யத்தை கொடுத்து ஆசீர்வாதம் வாங்க அனுப்பிவிட்டு, ஐயர் மந்திரம் ஓதுகிறார். மாங்கல்யத்தை அனைவரும் வணங்கி விட்டு ஐயரிடம் கொடுக்க அவர் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க அங்கு இருக்கும் ஒருவரிடம் சுந்தரவல்லி தாலியை எடுத்துக் குடுங்க என்று சொல்ல அவரும் சூர்யாவின் கையில் எடுத்துக் கொடுக்கிறார். அர்ச்சனா வெட்கப்பட்டு தாலி கட்டிக் கொள்ள ரெடியாக இருக்க கையில் தாலியை வாங்கிய சூர்யா ரொம்ப நேரமாக அமைதியாகவே இருக்கிறார்.

எல்லோரும் அட்சதை போட ரெடியாக இருக்க சூர்யா எழுந்து பின்னால் நின்று கொண்டு சாமி கும்பிட்டு கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி நிற்க நந்தினி ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியாகி நிற்கிறார். இதனைப் பார்த்து கோபமான அர்ச்சனா நேரம் பார்த்து பழி வாங்கிட்ட இல்ல சூர்யா இனிமே இந்த அர்ச்சனாவோட ஆட்டத்தை நீ பாப்ப இந்த தாலியும் இந்த மாலையும் என்னோட கழுத்துல ஏறும் என்று சவால் விட்டு சட்டையை பிடித்து கேட்கிறார். கோபத்தில் அர்ச்சனாவின் கழுத்தில் இருந்த மாலையை சூர்யா முகத்தில் எறிய தேங்க்ஸ் என்ற சொல்லிவிட்டு அதை நந்தினி கழுத்தில் போட்டு விடுகிறார். இதனால் மீண்டும் கடுப்பாகி அர்ச்சனா மணமேடையில் இருந்து வேகமாக கீழே இறங்கி வருகிறார்.

உடனே சுந்தரவல்லி அவரை கூப்பிட்டுக்கொண்டு பின்னாலே ஓடி வர அர்ச்சனா அவரை மரியாதை இல்லாமல் பேசுகிறார், நீ எல்லாம் ஒரு பொம்பளையா, பிள்ளையை எப்படி வளர்த்திருக்க உன்னோட புத்திதான உன்னோட புள்ளைக்கு இருக்கும் என்றெல்லாம் அசிங்கப்படுத்தி பேசுகிறார். உடனே சம்பந்தி என்று அவரை கூப்பிட என் பொண்ணு பேசினதெல்லாம் நான் பேசினா அசிங்கப்பட்டு போயிடுவ என்று அவரும் மிரட்டுகிறார். இதனால் சுந்தரவல்லி அதிர்ச்சியாகி நிற்கிறார். இதையெல்லாம் சூர்யா வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருக்க மாதவி ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் மினிஸ்டர் என் பொண்ணு சிந்துற ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நீ பதில் சொல்லணும், சொல்ல வைப்பேன் என்று கடும் கோபத்தில் பேசுகிறார் மினிஸ்டர். இது மட்டும் இல்லாமல் மினிஸ்டரின் மனைவி வேலைக்காரியோட உங்க பையன் காதலிச்சதை மறைச்சிட்டு என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட நினைச்சுட்டீங்களா உங்களை சும்மா விடமாட்டேன். நான் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சுந்தரவல்லிக்கு சாபம் விடுகிறார்.

கோபமாக மினிஸ்டரின் குடும்பம் மண்டபத்தை விட்டு கிளம்ப, உறவினர்கள் வந்து என்ன மேடம் உங்க பையனும் நல்லா தானே வளர்த்திருக்கீங்க என்ன இதெல்லாம் என்று கேள்வி கேட்டுவிட்டு அவர்களும் கிளம்பி விடுகின்ற. உடனே சுதாகர் சிரித்துக் கொண்டே இதுதான் நடக்கும் என்று எனக்கு தான் தெரியுமே அங்க இருந்து பெட்ரோல் போட்டு கொண்டு வந்தது இந்த கல்யாணத்தை பார்க்கறதுக்கு நினைத்தீர்களா? அந்த தோப்பு காரி இங்க என்ன ஆட்டம் ஆடுறான்னு பார்க்கலாம் தான் வந்தேன் பண்ணிட்டா இல்ல தலையில ஆணியை இறக்கிட்டால்ல என்று சிரித்துக் கொண்டே சொல்லுகிறார். உங்களுக்கு தோப்புல சோறு போடும்போதே தெரியும் ஏதாவது ஒன்னு பண்ணுவான்னு பண்ணிட்டா இல்ல என்று இன்னும் சுந்தரவள்ளியை வெறுப்பேத்தும் படி பேசுகிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நந்தினி கண்கலங்கி கண்ணீருடன் வாயடைத்து நிற்கிறார்.

கோபத்தின் உச்சத்தில் இருந்த சுந்தரவல்லி கோபமாக கத்தி சூர்யா என்று சொல்ல இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் கழட்டாமல் இருப்பதற்கு தான் மூன்று முடிச்சு இறுக்கி போட்டு இருக்க என்று சூர்யா சொல்லுகிறார். சிங்காரம் அருணாச்சலத்திடம் பெரிய மனசு பண்ணி நீங்க என்ன செய்யணுமோ அதை செய்ங்க ஐயா என்று அழுது கொண்டு கையெடுத்து கும்பிடுகிறார். சுந்தரவல்லி சூர்யாவிடம் இப்போது நீ எந்த தாலிய கழட்டுறியா இல்ல நான் வந்து கழட்டட்டுமா என்று கேட்கிறார். சுந்தரவல்லி தாலியை கழட்ட போக சூர்யா கையை தட்டி விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update