Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண் கலங்கிய நந்தினி, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்றைய எபிசோடில் சுந்தரவல்லி அருணாச்சலத்துடன் என்னை அசிங்கப்படுத்துவதற்காக அவன் எல்லாமே பண்ணிருக்கான் என்று கோபமாக பேசுகிறார். ஒரு அம்மாவா ஒரே ஒரு வாரிசு நம்மளோட பையன், அவனுக்கு ஒரு பெரிய இடத்துல இருந்து கல்யாணம் பண்ணதுக்குன்னு நெனச்சது என் தப்பா என்று கேட்கிறார். நானும் அதுதான் நினைச்சேன் ஆனா இப்படி பண்ணுவான் என்று நான் நினைக்கவே இல்ல என்று சொல்ல, அப்போ இப்ப நடந்ததுக்கு காரணம் நான் தானா என்று கேட்க, ஆமா நீங்க நீங்க மட்டும்தான் என்று கோபமாக பேசுகிறார். ஒரு நாள் உனக்கு எல்லாவுமே தெரிய வரும்போது அப்போ தெரியும் என்று சொல்லுகிறார். இப்பவே அவள வீட்ட விட்டு துரத்துறேன் என்று சுந்தரவல்லி ஆவேசமாக கிளம்ப மாதவி சுரேகா மற்றும் மாதவியின் கணவர் என மூவரும் தடுக்கின்றனர்.

இப்போதைக்கு வேண்டாமா அவ சூர்யா கூட இருக்கா, இப்ப போன ஒன்னும் பண்ண முடியாது. நீங்க பொறுமையா இருங்க என்று சொல்லி, உங்களுக்கு என்ன அவ வீட்டை விட்டு போகணும் அவ்வளவு தானே ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் கூட அவன் இந்த வீட்ல இருக்க கூடாது என்று கோபப்படுகிறார். பொறுமையாக இருங்க அம்மா பாத்துக்கலாம் என்று மாதவி ஆறுதல் சொல்லுகிறார். அருணாச்சலம் அந்த இடத்திலிருந்து வெளியே வந்து சிங்காரத்தை உள்ளே கூப்பிடுகிறார். தயவுசெய்து என் பொண்ணை வெளியே அனுப்பிவிடுங்க ஐயா என்னாலையும் என் பொன்னாளையும் உங்க குடும்பத்துல எந்த பிரச்சனையும் வேணாம். நாங்க கும்பிட்ட சாமி எல்லாம் எங்களை கைவிட்டுடுச்சு நாங்க போயிடுவோம். எங்களுக்கு சோறு போட்ட தெய்வம் நீங்க எங்களால உங்க குடும்பத்துக்கு கஷ்டம் வேணா என் பொண்ண வெளியே அனுப்பிடுங்க விடியறதுக்குள்ள நான் கிளம்பிடுறோம் விடியிற பொழுது உங்களுக்கு நல்லா இருக்கும் என்று அழுது கொண்டே சொல்லுகிறார்.

இந்த வீடு வசதி எல்லாம் இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போயிடும் ஆனா உண்மையான பணக்காரன் யாரு தெரியுமா? நிதானமும் பொறுமையா இருக்குற நீயும் உங்க பொண்ணு நான் பணக்காரங்க? சுந்தரவல்லி ஓட நீங்க தான் பணக்காரங்க என்று கண்கலங்கி பேசுகிறார். ஒரு பொக்கிஷத்தை அள்ளி என் புள்ள கைல கொடுத்துட்டு திருப்பி கொடு நான் எப்படி தர முடியும். சிங்காரம் நான் உன்கிட்ட ஒரே ஒரு வரம் கேட்கிறேன் எனக்கு சத்தியம் பண்ணி கொடு, நந்தினி எந்த முடிவு வேணா எடுக்கட்டும் ஆனா, நீ அவளை கூப்பிடவோ இல்ல கூட்டிட்டு போறேன்னு சொல்லக்கூடாது என்று சத்தியம் பண்ணு என்று கேட்கிறார். ஏற்கனவே அம்மா பேசணும் ஒவ்வொரு பேச்சும் எங்க மனசுல ஈட்டிய வச்சு குத்தின மாதிரி இருந்தது ஐயா இதுக்கு மேல எங்களால இந்த வார்த்தைகளை தாங்க முடியாது என்று அழுகிறார். ஆனாலும் அருணாச்சலம் இது அந்த கடவுள் போட்ட மூன்று முடிச்சா தான் நான் பாக்குறேன் என்று சமாதானப்படுத்தி அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

நந்தினி அழுது கொண்டே எழுந்து நின்று கண்ணாடியை பார்த்து மாலையை கழட்டி போடுகிறார். பிறகு தாலியை உத்து பார்த்துக் கொண்டே சூர்யாவை பார்த்து எதுவும் பேசாமல் வெளியே வந்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து சிங்காரமும் அருணாச்சலமும் வர நந்தினி கண்கலங்கி அழுகிறார். நந்தினியிடம் சூர்யா என்னம்மா பண்றான் என்று கேட்க ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு உங்க குடும்பத்துக்கும் விசுவாசமாக இருந்ததற்கு உங்க பையன் ஒரு நல்ல பரிசா குடுத்துட்டாரு என்று கையெடுத்து கும்பிடுகிறார். இதுவரைக்கும் எங்களை பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி எங்களை விட்ருங்க நாங்க எங்கேயாவது போயிருவோம் என்று அழுகிறார். உடனே அருணாச்சலம் ஏன் இப்படி நடந்தது எனக்கு தெரியாது என்ன மன்னிச்சிடுங்க ஆனா இதுக்கு பின்னாடி ஏதோ ஒன்னு இருக்குன்னு நான் நம்புறேன் என்று சொல்ல நந்தினி எங்களை விட்டுடுங்க நான் போயிடுறேன் என்று மீண்டும் சொல்லுகிறார்.

ஆனால் அருணாச்சலம் எங்க மேல இருக்கிற மதிப்பு மரியாதை காவது இருமா என்று சொல்ல அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இன்னும் இந்த தாலி ஏன் கழுத்துல இருக்கா ஐயா ஏற்கனவே பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி நீங்க அசிங்கப்பட்டு நிற்கும்போது மேலும் நான் அசிங்கப்படுத்த விரும்பல, உங்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கக் கூடாதுன்னு மட்டும் தான் நான் இப்படி நின்னுகிட்டு இருக்கேன். உன்னோட சூழ்நிலை எனக்கு புரியுது நந்தினி என்று அருணாச்சலம் சொல்ல ஆனா உங்க புள்ளைக்கு எதுவுமே புரியல உங்க புள்ளைய நான் என்னைக்குமே இந்த இடத்துல வச்சு பார்த்ததும் இல்ல, பார்க்கவும் மாட்டேன் தயவுசெய்து இந்த கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி எந்த சாங்கியமும் நடக்கல ஆனா இப்போ என்ன சாங்கியம் பண்ணனும் அதை பண்ணி இதை எடுத்துடுங்க இது எனக்கு சுருக்கு கயிறு மாதிரி இருக்கு என்று அழுகிறார். இது மட்டுமில்லாமல் அவருக்கு அம்மாவோட பாசமும் தெரியல, இந்த தாலி கயிறு மதிப்பும் புரியல அக்கா தங்கச்சிகளோட அரவணைப்பும் இல்லை என்று அழுது கொண்டே பேசுகிறார். குடும்ப வாழ்க்கையை பத்தி புரிதலே இல்லாம இவர் எப்படி மனுஷனா இருக்காரு. இந்த வீட்டு கோவிலாக உங்கள சாமியாவும் மதிச்சது ரொம்ப தப்பு தான். என் வாழ்க்கைய பத்தி கூட கவலைப்படல ஆனால் என் தங்கச்சிங்க என்ன தப்பு பண்ணாங்க. உங்க புள்ளைக்கு அவங்க அம்மாவ பிடிக்காததுனால என் கழுத்துல தாலி கட்டிட்டாரு. அவங்க அம்மாவுக்கும் பையனுக்கும் இருக்கிற சண்டையில என் கழுத்துல ஏன் சுருக்கு கயிறு மாட்டணும். ஏன்னா எங்களுக்கு தான கேக்குறதுக்கு ஆள் இல்ல எந்த நாதியும் இல்லை என்று அழ, அப்படியெல்லாம் பேசாத மா நானும் ரெண்டு பொண்ண பெத்து இருக்கேன், நீயே எனக்கு ஒரு பொண்ணு தான் அம்மா என்றெல்லாம் சொல்ல இல்ல கண்டிப்பா நான் போய் தான் ஆகணும் என்று முடிவோடு இருக்கிறார்.

உடனே சுந்தரவல்லி மீண்டும் கோபத்தோடு வந்து எங்கடி அவ எங்க இருக்கா நானே போய் அவளை பார்க்கிறேன் என்று வேக வேகமாக மேலே வர, அருணாச்சலத்திடம் நாங்க கிளம்புறோம் ஐயா, நீங்க உங்களோட தோப்ப வேற யாராவது வச்சு பாத்துக்கோங்க, அதுல நிறைய பால வந்திருக்கு பத்திரமா பாத்துக்கோங்க என்று அழுது கொண்டே அப்பாவிடம் நீ கெளம்புப்பா போகலாம் என்று சொன்னவுடன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரவல்லி அப்படியே பின்னால் இறங்குகிறார்.

உடனே சுந்தரர்களிடம் மாதவி அவளே கிளம்பி போய்டுவாமா அதுக்கு தான் நீங்க அவசரப்படாதீங்க ன்னு சொன்னேன் நீங்க ஏதாவது பேச போய் சூர்யாவுக்கு கேட்டா பிரச்சனை ஆயிடும் நீங்க போங்க போனதுக்கு அப்புறம் நானே வந்து சொல்றேன் என்று அனுப்பி வைக்கிறார். உடனே மாதவி அப்பாவ மீறி வெளிய போறேன்னு சொல்ற நீ மட்டும் எப்படிகா தடுப்ப என்று கேட்க, அதெல்லாம் பேசுற விதத்துல பேசினா அவ இருப்பா என்று நம்ம வெளிய போய் வெயிட் பண்ணலாமா என்று கூப்பிட்டு செல்கிறார்.

பிறகு நந்தினி ஒரு அடி எடுத்து வைக்க அருணாச்சலம் வழி மறைக்கிறார். நீங்க இப்படி பண்ணாதீங்க ஐயா நீங்க உள்ள போங்க உங்களை மீறி என்னால போக முடியாது என்று சொல்ல நீ போறதுன்னு முடிவு எடுத்துட்டினா அது உன்னோட விருப்பம் ஆனால் இப்போ சூர்யா இப்படி இருக்கானா அதுக்கு காரணம் என்னன்னு நீ தெரிஞ்சுகிட்டு போ என்று சொல்லுகிறார். அவர் இப்படி குடிச்சுகிட்டு அவங்க அம்மா கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கான் ஆனா எனக்கு அவன் மேல கோவம் வரல ஏன் தெரியுமா சூர்யா எப்படி நடந்துக்கிட்டா தெரியுமா?என்று சொல்லுகிறார். சூர்யா குறித்த உண்மையை நந்தினி அறிவாரா? வீட்டை விட்டு வெளியே போவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இன்று வெளியான ப்ரோமோவில் என் வாழ்க்கையை சூர்யா சார் அழிச்சிட்டாரே இதை நான் யார் கிட்ட போய் சொல்லுவேன் என்று அருணாச்சலத்திடம் நந்தினி சொல்லுகிறார்.

நீ என் மருமகளா இருன்னு நான் சொல்லல, என் மகளா இந்த வீட்ல இரு என்று கெஞ்சி கேட்டுக்குறேன் என்று அருணாச்சலம் சொல்ல, என்னோட சுயமரியாதை தன்மானம் இதை தாண்டி என்னால ஒரு நிமிஷம் கூட இங்கு இருக்க முடியாது என்று நந்தினி முடிவெடுக்கிறார்.

Moondru Mudichi Serial Promo Update
Moondru Mudichi Serial Promo Update