தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா சார் குடியை நிறுத்த வச்சுட்டா என்ன ஊருக்கு அனுப்பிவிடுவீர்களா?என்று கேட்க அருணாச்சலம் சூர்யா குடிய நிறுத்திட்டா சந்தோஷம்தான் ஆனால் நந்தினி ஊருக்கு போக கூடாது என்று யோசிக்க அருணாச்சலம் சூர்யா குடிக்காம இருந்தானா நந்தினியை அனுப்ப விடமாட்டான் சரி எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று மனதுக்குள் நினைத்து விட்டு, சரிமா நீ முதல்ல குடியை நிறுத்து என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இந்த விஷயம் சூர்யாவிற்கு தெரிய வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைக்க நந்தினி கிச்சனில் வந்து எப்படியாவது சூர்யா சர குடியிலிருந்து நிறுத்திட்டோம்னா நம்ம சீக்கிரமா ஊருக்கு போயிடலாம் இதை எப்படியாவது செய்யணும் என்று நந்தினி வேலையை ஆரம்பிக்கிறார். நந்தினி காபி போட்டுக் கொண்டிருக்க கல்யாணம் கிச்சனுக்கு வந்து ஏம்மா சீக்கிரமா எழுந்துட்டியா என்று கேட்க 5:00 மணிக்கு எழுந்துட்டேன் என்று சொல்லுகிறார்.
ஏமா இந்த குளிரில் எழுதுகிற என்று கேட்க, பரவால்ல அண்ணே என்று சொல்ல, கல்யாணம் சரி நான் காபி போடுறேன் என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே பண்றேன் என்று சொல்ல சின்னையா ஒரு ஒரு நேரம் காபி கூட இன்னொன்னு கலந்து குடுக்க சொல்லுவாரு அதெல்லாம் நீ குடுப்பியா என்று கேட்க அதை எல்லாமே நான் பார்த்துக்கிறேன் நீங்க போய் காரை சுத்தம் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
சூர்யா ரூமில் தூங்கிக் கொண்டிருக்க காபி கப்புடன் வந்த நந்தினி சூர்யாவிற்கு தெரியாமல் சரக்கு பாட்டிலில் இருக்கும் சரக்கை பாத்ரூமில் ஊற்றிவிட்டு அதில் காபியை ஊற்றி வைத்துவிடுகிறார். பிறகு சூர்யாவை எழுப்பி காபி எடுத்துக்கோங்க சார் என்று சொல்ல, என்ன நீ காபி எடுத்துட்டு வந்து இருக்க கல்யாணம் எங்க என்று கேட்க உடனே நந்தினி அண்ணன் வேற வேலையா இருக்காரு என்று சொல்ல இதை விட்டா வேற என்ன வேலை இருக்கு என்ற சூர்யா கேட்கிறார். தெரியல சார் என்று சொல்ல சரி நீ வச்சுட்டு கெளம்பு நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். நந்தினி மறைந்திருந்து பார்க்க கட்டிலில் இருந்து எழுந்த சூர்யா நந்தினி சரக்கு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்ததை கப்பில் ஊற்றி குடித்துவிட்டு கீழே துப்புகிறார். இது என்ன சரக்கு மாதிரி இல்ல டிகாஷன் மாதிரி இருக்கு என்று சொல்லி நந்தினி என கூப்பிட நந்தினி ஓடி வந்து என்ன சார் என்று கேட்க டிகாஷன் யார் ஊத்தினது என்று கேட்க, எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். உடனே சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு திட்டி விட்டு, இனிமே எனக்கு நீதான் காபி எடுத்துட்டு வரணும் என்று சொல்லிவிட்டு சூர்யா பாத்ரூம் சென்றுவிட நந்தினி வேக வேகமாக கப்போர்டில் இருக்கும் சரக்கு பாட்டில்களை எடுத்து செடிகளில் ஊற்ற கல்யாணம் பயத்தில் நடுங்குகிறார். வழியில் கல்யாணம் வேண்டாம் என தடுக்க அவரை தள்ளிவிட்டு மொத்த சரக்கையும் செடியில் ஊத்தி விடுகிறார். பிறகு வாங்க போகலாம் என்று சொல்லி இருவரும் ஓடி வந்து விட, நந்தினி வெளியில் வந்து ஜாலியாக உட்காருகிறார்.
அப்போ காலைல பண்ணதும் நீதானா என்று சொல்ல ஆமா சென்ட் பாட்டில் மாதிரி வச்சிருந்தா இல்ல அதுலயும் டிகாஷன் ஊத்துனது நான்தான் என்று சொல்ல நீ எதுக்கு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். அவர் திருத்த தான் என்று சொல்ல நீயா என்று கேட்கிறார். நீ சரக்கு பாட்டல்ல டிகாஷன் கலந்தாலும் இல்ல கீழே ஊற்றினாலும் அவருக்கு குடிக்க வேற வழியே கிடையாதா அவர் வெளியே போய் குடிக்க தான் போறாரு என்று சொல்லுகிறார்.
அதுவும் நீ பண்ண கோபத்துக்கு இன்னும் ரெண்டு மடங்கு குடிப்பாரு என்று சொல்ல, ஏதாவது நல்ல விஷயமா சொல்லுங்க நான் என்று சொல்ல, குடியல அய்யா ஊறி போய் இருக்காரு சொத்தில் கூட பங்கு கொடுத்துடுவாரு ஆனா சரக்கு பாட்டில விட்டுக் கொடுக்க மாட்டார். அதுவும் எங்க சின்னையா உள்ளூர் சரக்கு எல்லாம் குடிக்க மாட்டாரு எல்லாமே வெளிநாட்டு சரக்கு தான் சரக்கு இல்லன்னா அவன் உடனே எடுத்துக்கிட்டு வந்து கொடுத்துடுவான். சின்னையாவுக்கு சரக்கு சப்ளை பண்ற இடமே வேற அதனால இதெல்லாம் ஒளிக்க வச்சு எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு கல்யாணம் கிளம்ப, ஏன் முடியாது பண்ணி காட்றேன் என்று நந்தினி சொல்லுகிறார்.
மறுபக்கம் மினிஸ்டரிடம் மனைவி அவ அந்த சூரியாவோட நினைப்பிலேயே இருக்கா நீங்க கொஞ்சம் சொல்லி புரிய வைங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து டிரைவர் ஸ்வீட் பாக்ஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க என்ன விஷயம் என்று கேட்கிறார். உங்க தலைமையில என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா அந்த நேரத்துல அர்ச்சனா அம்மாவோட கல்யாணம் இருந்தது அதனால சிம்பிளா கோவில்ல முடிச்சிட்டேன் என்று சொல்ல இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் இப்போ என் பொண்ணு மூணு மாசம் முழுகாம இருக்கா அதனால உங்களுக்கு ஸ்வீட் கொடுக்க வந்தேன் என்று சொல்ல மினிஸ்டர் கோபமாக ஸ்வீட் பாக்ஸை எரிய வாசலில் அர்ச்சனா கையில் பிடிக்கிறார்.
மினிஸ்டர் மனைவி ஏன் அந்த ஸ்வீட் பாக்ஸ் அப்படி தூக்கி போடுறீங்க என்று கேட்க ஏற்கனவே என் பொண்ணு கல்யாணம் நடக்காத கோவத்துல இருக்க இவன் எடுத்துகிட்டு வந்து பொண்ணு முழுகாம இருக்கா அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்லி அங்கிருந்து போக சொல்லுகிறார். உடனே அர்ச்சனா அப்போ இவங்க பொண்ணு கன்சீவ்வா இருக்கானா அப்பா அங்க ஏதாவது நடந்திருக்கணும் என்று யோசித்துக் கொண்டு வந்து ஏம்பா இப்படி ஸ்வீட் பாக்ஸ் தூக்கி போடுறீங்க அவர் எவ்வளவு பாசமா எடுத்துக்கிட்டு வந்தாரு வாங்கிக்கோங்கப்பா என்று சொல்ல அவரும் வாங்கிக் கொள்கிறார். அங்கிள் சொன்னத வச்சு நீங்க கோவப்படுறீங்க ஆனா நான் வேற ஒன்னு யோசிக்கிறேன். எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ண நாள்ல தான் அந்த பொண்ணு கல்யாணம் நடந்திருக்கு அந்த பொண்ணு பிரக்னண்டா இருக்காண்ணா அப்போ சூர்யாவும் நந்தினியும் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃபா இன்னும் வாழலைன்னு தோணுது என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனாவின் அம்மா கல்யாணம் ஆகி மூனே மாசத்துல பிரகனண்ட் ஆகணும்னு என்ன அவசியம் இருக்கு என்று கேட்டு அதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். ஆமா எனக்கு தான் பிரச்சனை நானே கண்டுபிடிக்கிறேன் என்று சென்று விடுகிறார். பிறகு சூர்யா ரூமில் வந்து சரக்கு பாட்டில்களை திறந்து பார்க்க எதிலுமே சரக்கே இல்லாததை பார்த்து அதிர்ச்சியாகி இது யாரோட வேலை என்று யோசித்து ஒருவேளை இந்த நந்தினி பண்ணி இருப்பாளோ என்று நினைத்து டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி ஓரமாக வந்து சாமி போட்டோவிற்கு பூ போட்டு கொண்டிருக்க சூர்யா போனை எடுத்துப் பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
