Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவிற்காக நந்தினி எடுத்த முடிவு.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

moondru mudichu serial episode update 16-02-25

தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா வாயில் நுரை தள்ளி மயங்கி கிடக்க குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போகின்றனர் உடனே அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்கின்றனர். டாக்டர் அவர் குடிச்சிருக்காறார் என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் குடிச்சிருந்தா எந்த மெடிசனும் கொடுக்க முடியாது அவரோட கண்டிஷன பாத்துட்டு நான் உங்களுக்கு சொல்றேன் என டாக்டர் வந்து சூர்யாவை செக் செய்கின்றனர். அருணாச்சலம் அசோகனை உங்களுக்கு அறிவே இல்லையா எதுக்கு சரக்கு வாங்கி கொடுத்தீங்க அவன் கேட்ட வாங்கி கொடுத்து விடுவீங்களா அவனுக்கு ஏதாவது ஆகட்டும் அப்புறம் இருக்கு என்று சொல்லி மிரட்ட அசோகன் பயப்படுகிறார்.

டாக்டர் வெளியில் வந்து அவர் பிளட்ல பாய்சன் கலந்து இருக்கு இப்போ ஏதாவது அவருக்கு மருந்து கொடுத்தீங்களா என்று கேட்கிறார். அது அவருக்கு பிளட்ல பாய்சன்னா மாறி இருக்கு. டாக்டர் எங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்றோம் என சொல்ல சுந்தரவல்லி அப்படியெல்லாம் சொல்லாதீங்க எவ்வளவு காசு செலவானாலும் பரவால்ல அவனை காப்பாத்திடுங்க என்று சொல்ல எங்களால முடிஞ்சத நாங்க கண்டிப்பா பண்றோம் என சொல்லுகின்றன. உடனே மாதவி நீதான சூர்யாவிற்கு நாட்டு மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி கொடுத்த என்று கேட்க நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

உடனே அருணாச்சலம் மாதவி அதுக்கும் இருக்கும் சம்பந்தம் இல்லை நீ அமைதியா இரு என்று சொல்ல அதற்கு சுந்தரவள்ளி எது சம்பந்தமில்லை இவளால பிரச்சனையும் வருது என்று கோபப்பட சுரேகா இவதா குழந்தை பெத்துக்கறதுக்காக மருந்து வாங்கி கொடுத்து சூர்யாவா காலி பண்ணிட்டு சொத்தெல்லாம் ஆட்டைய போட பாக்குறா என்று சொல்ல நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணலாமா என்று சொல்ல சுந்தரவல்லி நந்தினியை அறைந்து விடுகிறார். பிறகு அவன் எப்படி இருந்த பையன் தெரியுமா நீ குழந்தை பெத்துக்கிறதுக்காக அவனை இப்படி சுயநலமில்லாமல் படுக்க வச்சிருக்கியா இவ மருந்து கொடுத்ததனாலதான் இப்படி ஆயிருக்கு. சுந்தரவல்லி தொடர்ந்து கோபப்பட்டு பேசிக்கொண்டே இருக்க அருணாச்சலம் முதல்ல ட்ரீட்மென்ட் முடியட்டும் அதுக்கு அப்புறம் பேசிக்கலாம் நந்தினி தப்பான மருந்தெல்லாம் சூர்யாவுக்கு கொடுக்கல என்று சொல்லுகிறார். அவன் குடிக்காம இருக்குறதுக்கு தான் மருந்து வாங்கி கொடுத்து இருக்கா அதனாலெல்லாம் பிரச்சனை இல்லை அவர் சரக்கு வாங்கி கொடுத்ததனாலதான் பிரச்சனை என்று சொல்லி அருணாச்சலம் செல்ல அவன் இவ்வளவு நாளா குடிக்காமயா இருந்தா அப்ப ஏதாவது பிரச்சனை வந்துச்சா எல்லாமே இவ மருந்து வாங்கி கொடுத்ததினால் தான் என்று சொல்லிவிட்டு அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்ன குடும்பத்தோட வச்சு கொலுத்திடுவேன் என்று நந்தினி மிரட்டி விடுகிறார்.

மீண்டும் டாக்டர் வெளியே வர எப்படி இருக்கான் டாக்டர் என்று சுந்தரவல்லி கேட்க க்ரிட்டிக்கலா தான் இருக்காரு நீங்க உங்க குலதெய்வத்தை வேண்டிக்குங்க நாங்க பண்றது செய்றோம் என சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகின்றனர். உடனே சுந்தரவல்லி நந்தினி இதுக்கு மேல எதுக்கு நின்னுகிட்டு இருக்க ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக்கூடாது என்று கழுத்தைப் பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளி விடுகிறார். இதுக்கு மேல நீங்க மூஞ்சிலேயே முழிக்க கூடாது நீங்க எப்போ என் வீட்டுக்கு வந்தாயோ அப்பவே என் பையனுக்கு கேடுகாலம் பொறந்திருச்சு இங்க இருந்து போயிடு என்று துரத்தி அனுப்ப நந்தினி அழுது கொண்டே அங்கிருந்து வெளியில் வருகிறார்.

ரேணுகா பதற்றத்துடன் இருக்க அர்ச்சனா அங்கு வருகிறார். எதுக்கு என்ன வர சொன்னா என்று கேட்க அந்த மருந்து கொடுத்து சூர்யா சாருக்கு வாயிலிருந்து நுரை வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல அது நான் வாங்கிக் கொடுத்த மருந்து தான் சீரியஸா இருப்பான் ஆனா ஒன்னும் ஆகாது என்று சொல்லுகிறார். பிறகு அங்கு என்ன நடந்தது என்று கேட்கிறார். ரேணுகா நடந்த விஷயங்களை சொல்ல சரி சூப்பர் நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

கோவிலுக்கு நேராக வந்த நந்தினி சூர்யா சாரோட நல்லதுக்காக தான் நான் இப்படி பண்ண, இது நாள் வரைக்கும் எத்தனையோ சோதனை எனக்கு கொடுத்த எல்லாத்தையும் எனக்கு கொடுத்த நான் தாங்கிகிட்ட ஆனா இப்போ அவருக்கு இப்படி நடந்தா என்னால தாங்க முடியுமா என்னை எதுக்கு இப்படி பாடா படுத்துற என்று அழுது கொண்டே வேண்டிக் கொண்டிருக்க அங்கு சிலர் மஞ்சள் புடவையில் தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த நந்தினி அங்கு செல்கிறார். மறுபக்கம் அருணாச்சலம் நந்தினி எங்க என்று கேட்க மூவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால் வெளிய அனுப்பிட்டீங்க அப்படித்தானே யார் மேல எந்த தப்பு இருக்குன்னு தெரியாமையே வெளிய அனுப்பிட வேண்டியதுதான் என்று சொல்லி கோபப்படுகிறார். என் பையன் சூர்யா அவன் இருக்கிற இடத்தை எவ்வளவு கலகலப்பா வெச்சிருப்பான் ஆனா இப்போ அவன் இருகிற இடம் அவன் மூச்சு காத்து கூட சத்தம் வரல என்று கோபப்பட்டு அவ நாசமா போயிடுவாய் என நந்தினிக்கு சாபம் விடுகிறார். சூர்யா எப்படியாவது வந்துடுடா என்று கண் கலங்கி சுந்தரவல்லி அழுகிறார்.

சுரேகா மாதவியிடம் இவ்வளவு நாளா சூர்யா குடிக்கிறான் ஆனா இப்ப மட்டும் என்னக்கா இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல எனக்கு அது தான் பயமா இருக்கு என்று மாதவி சொல்லுகிறார். அங்கிருந்து தனியாக வந்த அருணாச்சலம் விஜிக்கு போன் போட்டு நான் சொல்றத பதற்றப்படாமல் கேளு சூர்யாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியாமல் சீரியஸ் கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கும் என்று நடந்த விஷயங்களை விஜியிடம் சொல்லுகிறார். பதறிப்போன விஜி நான் வந்து அண்ணனை பார்க்கணும் என்று சொல்ல, அதெல்லாம் வேணாமா இப்பத்திக்கு நந்தினி எங்க இருக்கான்னு பார்க்கணும் சுந்தரவல்லி அவளை சத்தம் போட்டு அனுப்பிட்டா, என்று சொல்ல அதற்கு விஜி அவ கோயிலுக்கு தான் போயிருப்பா நாங்க ரெண்டு பேரும் வழக்கமா போற கோவில் ஒன்னு இருக்கு நாங்க போய் பார்க்கிறேன் என்று சொல்ல நீ போய் பார்த்து நந்தினி கூட்டிட்டு வாம்மா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். கோவிலில் நந்தினி மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு வர அவருக்கு தலையில் தண்ணீர் ஊற்றுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவை திருத்த நந்தினி எடுத்த எல்லாம் முடிவும் சுக்கு நூறா உடைந்தது. உயிருக்கு போராடும் சூர்யாவின் நிலைமைக்கு காரணம் நந்தினி என நினைக்கிறார் சுந்தரவல்லி.

குற்ற உணர்ச்சியில் இருக்கும் நந்தினி சூர்யாவின் உயிரை காப்பாற்ற கடவுளிடம் உயிர் பிச்சை கேட்கிறார். நந்தினியின் இந்த அன்பு சூர்யாவை காப்பாற்றுமா? என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial episode update 16-02-25