கேள்வி மேல் கேள்வி கேட்ட மாதவி, நந்தினியின் பதில் என்ன? மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி விஜிக்கு போன் போட விஜி சூரியாவை பற்றி விசாரிக்க அவர் மொட்டை மாடியில் டென்ஷன்ல நடந்துகிட்டு இருக்காரு என்ன குடித்தாலும் போதை ஏற மாட்டேங்குது அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு என்று சொல்ல உடனே விவேக்கிடம் போன் கொடுக்க சொல்லுகிறார். நந்தினி அவருக்கு நன்றி சொல்ல அவரை திருத்துவதற்கு நீங்க ரொம்ப ஹெல்ப் பண்ணீங்க என்று சொல்லுகிறார்.

நீங்க அவரை மாத்தணும்னு நினைச்சு பண்ண ஹெல்ப்ப நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் என்று சொல்ல இது சூர்யாவுக்கு தெரிஞ்சா என்ன டைவர்ஸ் பண்ணிடுவான் என்று சொல்ல நந்தினி சிரிக்கிறார். நீ வந்ததுக்கப்புறம் தான் மா சூர்யா கிட்ட நான் நிறைய மாற்றத்தை பார்க்கிறேன் என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இல்ல அண்ணே. அப்போ நான் சொன்னா நீ ஏத்துக்க மாட்டேன் அப்படித்தானே என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார். ஒரு நண்பனா நான் சொல்றேன் அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை உனக்கு புரிய வைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

உடனே விஜி இன்னும் எத்தனை நாளைக்கு சரக்கு மாத்தி வைக்க முடியும் அவரு குடிக்கிறதுக்காகவே பாரின் போவாரு நம்மதான் உஷாரா இருக்கணும் என்று சொல்ல அப்போ என்ன பண்றது கா என்று கேட்கிறார். எனக்கு தெரியல நந்தினி ஆனால் கிராமத்து பக்கத்துல குடிக்கிறவங்களுக்கு தெரியாம அந்த மருந்து கொடுத்தா அவங்களுக்கு குடி மேல இருக்குற ஆசையே போயிடும்னு கேள்விப்பட்டிருக்க நான் விசாரிக்கிறேன் நீயும் விசாரிச்சு பாரு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

கிச்சனின் ரேணுகா வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் ரேணுகாவிடம் நீ நண்டெல்லாம் நல்லா சமைப்பன்னு சொன்னாங்க நாளைக்கா நண்டு வாங்கிட்டு வரேன் செஞ்சிடுமா என்று சொல்ல அதுக்கு என்னென்ன பண்ணிட்டா போகுது என்று சொல்ல, நந்தினி கிச்சனுக்கு வந்து கல்யாணத்திடம் கிராமத்தில் கிடைக்கும் நாட்டு மருந்து குறித்து கேட்க இங்கே இருக்குதா என்று கேட்கிறார் அதெல்லாம் இருக்குதும்மா கோயில்ல கயிறு கட்டுவாங்க ஆனா சிலர் அதை கழட்டி வச்சிட்டு குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க என்று சொல்ல, அது கயிறு என்ன ஆனா நான் சொல்றது நாட்டு மருந்து என்று கேட்க, கல்யாணம் அதெல்லாம் கொடுத்தா நிறைய பேர் குடியிலிருந்து நிறுத்திருக்காங்க ஆனா ஒன்னு அவங்கள கூட்டிட்டு போய் கொடுக்கணும் என்ன அவங்களுக்கு தெரியாம கொடுக்கணும் இரண்டுமே கஷ்டம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லன்ன கொடுத்துவிடலாம் ஈஸிதான் என்று சொல்ல, இதெல்லாம் யாருக்காக கேட்டுக்கிட்டு இருக்க என்று சொல்ல சூர்யா சாருக்கு தான் என்று நந்தினி சொல்லுகிறார் அதெல்லாம் விடுங்க எனக்கு எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார் இதையெல்லாம் ரேணுகா கேட்டுக்கொள்கிறார்.

உடனே நந்தினி அருணாச்சலத்திடம் சென்று இப்பத்திக்கு தற்காலிகமா தான் அவரது குடியிலிருந்து நிறுத்தி வைக்க முடியும். ரெண்டு மூணு நாளைக்கு தான் இது சரிப்பட்டு வரும் அதுக்கு அப்புறம் தொடர்ந்து இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லுகிறார். பிறகு நாட்டு மருந்து இருக்கும் விஷயத்தை சொல்ல அந்த நாட்டு மருந்தை பாலில் கலந்து குடித்தால் அது குடிப்பழக்கத்தை மறக்க வைக்குமாம். அது மட்டும் இல்லாமல் அதையும் மீறி வாயில் வைத்தால் கொமட்டிகிட்டு வாந்தி எடுத்துடுவாங்களா அந்த வாசனையே பிடிக்காதுன்னு சொல்றாங்க என்று சொல்ல அந்த ஊரும் இடத்தையும் சொல்ல அருணாச்சலம் நானும் கேள்விப்பட்டு இருக்கேன் மா என்று சொல்ல நான் வாங்கிட்டு வரட்டுமா என்று அருணாச்சலம் கேட்க வேண்டாம் ஐயா நானும் விஜி அக்காவும் போய் வாங்கிட்டு வரோம் உங்ககிட்ட அனுமதி கேட்க தான் வந்தேன் என்று சொல்ல அனுமதியா ஏமா இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க சூர்யா ஒரு மனுஷனா மாறி வரணும் அவ்வளவுதான் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

விஜி நந்தினியை பார்க்க வீட்டுக்கு வந்து, எங்க ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்த மாவடு ஊறுகாய் ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட்டு பாரு என்று சொல்லிக் கொடுக்க நானே உங்கள பாத்து பேசணும்னு நினைச்சேன் உங்களுக்கு கொஞ்சம் வேலை இல்லனா நம்ம வெளியே போயிட்டு வரலாம் என்று கேட்க போலாம் என்ன விஷயம் என்று கேட்கிறார். நீங்க சொன்னதெல்லாம் கரெக்டு தான் நானும் கொஞ்சம் இடத்துல விசாரிச்சேன் நாட்டு மருந்து இருக்கும் இடத்தை கேட்டுள்ளேன் நம்ம போய் வாங்கிட்டு வந்துடலாமா என்று கேட்க இதில் என்ன இருக்கு வா போயிட்டு வந்துரலாம் எங்க வீட்லயும் ஒரு குடிகாரர் இருக்காரு ரெண்டு செட்டா வாங்கிட்டு வந்துடலாம் என்று சொல்லி விஜி கிளம்ப நந்தினி தயாராக இருக்க, மறுபக்கம் சூர்யா டென்ஷன் ஆகி டாக்டரிடம் உங்களுக்கு தான் எல்லாமே தெரியும் இல்ல நான் எவ்வளவு குடிப்பேன் ஆனா இப்ப எவ்வளவு குடிச்சாலும் எனக்கு போதையே ஆக மாட்டேங்குது எனக்கு ஏதாவது ஆயிட்டு இருக்குமா, நான் குடிக்கிற அதே சரக்கை எல்லாரும் கொடுக்கிறாங்க எல்லாருக்கும் போதை ஆகுது எனக்கு மட்டும் போதை ஆக மாட்டேங்குது என்னால குடிக்காம ஒன்னும் பண்ண முடியல, என் உடம்புல ஆல்கஹால் போயே ஆகணும், என் உடம்புல போதை ஏறியே ஆகணும் ஏதாவது சொல்லுங்க ஏதாவது பண்ணுங்க என்று புலம்பி தள்ளுகிறார். என் லைஃப்ல பாய் பெஸ்டி கேர்ள் பெஸ்டி எல்லாமே இவங்கதான் இவங்க இதுக்கு மேல எனக்கு போதயே தர மாட்டாங்களா என்று கேட்கிறார்.

இதுக்கு மேல என் வாழ்க்கையிலேயே போதை ஏறாதா எனக்கு பச்ச தண்ணி மாதிரி தான் இருக்குமா என்றெல்லாம் புலம்ப நந்தினி ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு மூளை கை எல்லாம் உதறுது ஏதாச்சு ஒன்னு பண்ணுங்க எனக்கு போதை ஏறனும் போத வேண்டும் ஏதாவது சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்க டாக்டர் நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பண்றேன்னு என சொல்லி போனை வைத்து விடுகிறார். பிறகு விஜி ஆட்டோவில் வந்துவிட்டு நந்தினிக்கு போன் போட்டு கூப்பிடுகிறார். நந்தினி அருணாச்சலத்திடம் நாட்டு மருந்து கடைக்கு போயிட்டு வருவோம் என்ற விஷயத்தை சொல்ல அந்த நேரம் பார்த்து மாதவியும் அசோகனும் வந்து விடுகின்றனர். வெளியில் வந்த நந்தினி கூப்பிட்டு மாதவி எங்க போயிட்டு இருக்க என்று கேட்கிறார். நாட்டு மருந்துன்னு என்னமோ பேசிகிட்டு இருந்தீங்க யாருக்கு நாட்டு மருந்து எங்க போய் வாங்க போற என்று கேள்வி மேல் கேள்வி கேட்க நந்தினி என்ன சொல்வதென தெரியாமல் யோசிக்கிறார். நான் எதுவும் கஷ்டமான கேள்வி ஒன்னு உன்கிட்ட கேட்கலையே நீயும் அப்பாவும் நாட்டு மருந்து பற்றி தானே பேசிகிட்டு இருந்தீங்க என்று கேட்கிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

5 days ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…

5 days ago

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

6 days ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…

6 days ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…

6 days ago

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…

6 days ago