Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா சொன்ன வார்த்தை,நந்தினியின் பதில் என்ன?மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

moondru mudichu serial episode update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா விஜி பேசியதை நினைத்து ஓவராக குடித்துவிட்டு சரக்கு பாட்டிலிடம் பேசுகிறார். உனக்கு தான் எந்த பீலிங்ஸ் இல்லையே அப்புறம் எதுக்கு நடந்ததை பற்றி இவ்ளோ பீல் பண்ற என்று கேட்டுவிட்டு ஏன்னா நீ தான் என்னோட மனசாட்சி அதனாலதான் நீ என்கிட்ட எதுவா இருந்தாலும் நேரடியா கேளு என்கிட்ட ஃப்ரீயா உட்கார்ந்து பேசு என்று மனசாட்சியிடம் பேசச் சொல்லுகிறார்.

உடனே சூர்யா போன்ற இன்னொரு உருவம் அதாவது மனசாட்சி சூர்யாவிடம் அந்த டெல்லி நந்தினி உனக்கு யாருன்னு கேட்டப்போ என் பொண்டாட்டின்னு ஏன் சொல்லல நீயும் உங்க அம்மா மாதிரி நந்தினி வேலைக்காரிய பாக்குறியா என்று கேட்க நீ என்ன வேணா பேசு ஆனா தாய்க்கிழவிய மட்டும் இழுக்காத என்று சொல்லுகிறார். நீ அவளை தொட்டு தாலி கட்டி இருக்க ஒண்ணா ஒரே ரூம்ல இருந்து இருக்கீங்க அப்புறம் பொண்டாட்டின்னு சொல்ல ஏன் உனக்கு வலிக்குது அப்ப நந்தினி உனக்கு யார் என்று கேட்க சூர்யா தயங்கிக் கொண்டே பிரண்டு என்று சொல்ல எவனாச்சு ஃபிரண்டு கழுத்துல தாலி கட்டுவானா என்று மனசாட்சி கேள்வி கேட்கிறது. உடனே சூர்யா தடுமாற மனசாட்சி உங்க அம்மாவ வெறுப்பேத்தணும்ன்றதுக்காக தாலி கட்டுன போதுமான அளவுக்கு வெறுப்பேத்திட்ட நந்தினி ஓட இடத்தில் இருந்து யோசிச்சு பார்த்தியா என்று கேட்கிறது.

கரெக்டு தான் என்றோ சொல்ல உடனே மனசாட்சி நந்தினி எதுக்கு இந்த வீட்ல இருக்கணும் என்று கேட்க சூர்யா எனக்கு இப்போ புரிஞ்சிருச்சு நந்தினி போயிடட்டும் நானே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல முடிவிலும் மாற மாட்டேன் என்று மனசாட்சி கேட்க நான் ரொம்ப தெளிவா இருக்கேன் என்று சூர்யா நினைக்க மனசாட்சி மறைந்து விடுகிறது. மறுபக்கம் நந்தினி வீட்டில் சுந்தரவல்லி பேசியதை நினைத்து இதுக்கு மேல இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது யார் தடுத்தாலும் இங்க இருந்து போயிடனும் என்று சொல்லி பையில் துணிகளை எடுத்து வைக்கிறார். உடனே கீழே சூர்யா வருவதை கவனித்து மேலிருந்து எட்டிப் பார்த்த நந்தினி அருணாச்சலம் சூர்யாவிடம் விசாரிக்கப் போனது என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அந்த டெல்லி யாரு அவன் எதுக்கு நந்தினி கிட்ட வம்பு இழுக்கிறான் நம்ம வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சு தான் பண்ணானா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க சூர்யா எல்லாத்துக்கும் சாரி டாடி என்பதை மட்டும் பதிலாக சொல்ல உனக்கு என்னடா ஆச்சு என்று கேட்கிறார் சாரி டாடி இதுவரைக்கும் நடந்ததற்கு சாரி இதுக்கப்புறம் நடக்க போறதுக்கு சாரி என்று சொல்லிவிட்டு போக இவன் எதுக்கு லூசு மாதிரி இதே பேசிகிட்டு இருக்கான் என்று அருணாச்சலம் சொல்ல உடனே சுந்தரவல்லி அவன் லூசு மாதிரி சொல்லல உங்கள லூசாகிட்டு போறான் என்று சொல்லுகிறார். இன்னிக்கு நம்ம பையனோட பேச்சுல ஒரு மாற்றம் தெரியுது என்று சொல்ல எதையோ மனசுல அவன் முடிவு எடுத்துட்டு பேசினால் என்று சுந்தரவல்லி சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை போய் தூங்கலாம் என்று அருணாச்சலம் கிளம்ப எனக்கு தூக்கம் வரல நீங்க போய் படுங்க என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் சுந்தரவல்லி உட்கார்ந்து இருக்கிறார்.

மறுபக்கம் மூளையில் நந்தினி அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா குடிபோதையில் தடுமாறி கொண்டு வந்து சரக்கு பாட்டில் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு அந்த விஜி கேட்ட கேள்வி எல்லாமே கரெக்ட் விஜி எனக்கு தங்கச்சி மாதிரி தான் ஆனா என்கிட்ட எந்த விஷயம் கேட்டாலும் பயந்துகிட்டு தான் கேட்பா ஆனா உனக்காக இன்னைக்கு கேட்ட விஷயம் எல்லாமே என் புத்திக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அந்த வட்டிக்காரன் டெல்லி உன்னை யாருன்னு கேட்கும்போது எனக்கு ஏன் நீ என் பொண்டாட்டின்னு சொல்ல தோணல அது ஈஸியான கேள்வி தானே அது ஏன் என் மனசுக்குள்ள தோன்றவில்லை என்று சூர்யா கேள்வியை கேள்வி கேட்கிறார்.

நந்தினி நீங்க இன்னைக்கு என்ன என்னமோ பேசிக்கிட்டு இருக்கீங்க போய் படுங்க சார் என்று சொல்ல இன்னைக்கா எப்படி தூங்க முடியும் இன்னைக்கு நான் நிறைய பேசணும் எல்லாத்துக்கும் நீ பதில் நான் எடுத்த முடிவு சரியா தப்பா என்று பதில் சொல்லி ஆகணும் என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
moondru mudichu serial episode update