நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கன்னத்தில் அறைந்ததை நினைத்து நந்தினியும் சிங்காரமும் வருத்தப்பட்டு உட்காரந்து கொண்டிருக்கின்றனர். உடனே நந்தினி இந்த விஷயத்தை அம்மாச்சி கிட்டயும் தங்கச்சி கிட்டயும் சொல்ல வேண்டாம்பா என்று சொல்லுகிறார். சொன்னா அவங்க கஷ்டப்படுவாங்க என்று பேசிக்கொண்டு கையில் இருக்கும் மோதிரத்தை எடுத்து சிங்காரத்திடம் காட்டுகிறார். அந்த நேரம் பார்த்து மேலே இருந்து சூர்யா சரக்குக்கு சைடிஷ் எடுத்துட்டு வா மோகினி என்று கூப்பிடுகிறார்.
உடனே வேகமாக ஓடி வந்து நந்தினி சைடிஸ் கொடுத்து விட்டு உடனே கிளம்ப சூரியா நான் குடிக்கும்போது பேசலனா எனக்கு பிடிக்காது அதனால நில்லு ரோகினி என்று சொல்ல என் பேரு நந்தினி சார் என்று சொல்லுகிறார் சரி சரி ஓகே என்று நந்தினியிடம் பேசுகிறார். நீ என்ன ஒரு கன்னத்தில் அறைஞ்சா மறு கன்னத்தை காட்டிக்கிட்டு நிக்கிற என்னை யாராவது அடிச்சா அவ்வளவுதான் என்று கோபப்பட நந்தினி அவங்க என்னோட முதலாளி அம்மா என்று சொல்லுகிறார். அப்படியா போய் இன்னொரு அடி வாங்கிக்கோ என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி சூர்யாவிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது உங்க பொண்டாட்டி வந்தா என்ன நினைப்பாங்க என்று சொல்ல என்ன நினைப்பா இன்னொரு பெக் ஊத்துன்னு சொல்லுவாங்க என்று சொல்லுகிறார். நான் குடிக்கிறதுல யூஜினா அவர் பிஜி என்று சொல்லுகிறார். அதை விடுங்க உங்க குழந்தைங்க பிறந்தா என்ன நினைப்பாங்க அருணாச்சலம் சார் மாதிரி ஒரு அப்பாவா நீங்க இருக்க வேணாமா என்று சொல்ல இதனை அருணாச்சலம் பின்னாடி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு கிடைச்ச மாதிரி ஒரு அப்பாவும் குழந்தைக்கு கிடைக்க வேணாமா என்று சொல்ல சூர்யா யோசிக்கிறார்.
மறுநாள் கல்யாணத்துக்கு கிளம்பனும் இன்னும் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது தெரியவில்லை என்று சுரேகாவும் மாதவியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வர அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மாதவியின் கணவர் ஒரு லிஸ்டை சுந்தரவல்லி இடம் கொடுத்து இதை வாங்கணும் என்று சொல்லுகிறார். அதில் அரசாணி கொம்பு மற்றும் அதில் இருக்கும் பொருள்கள் எதுவும் சுந்தரவல்லிக்கு தெரியாததால் அங்கு இருப்பவர்களிடம் கேட்கிறார். அங்கு இருப்பவர்களுக்கும் அதைப் பற்றி தெரியாத போது நந்தினி எனக்கு தெரியுமா என்று சொல்லுகிறார். அரசாணி கொம்பு நடுவதற்கான விளக்கத்தை நந்தினி சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். இது எங்க இருக்குன்னு எனக்கு தெரியுமா நானே எடுத்துட்டு வரேன் என்று நந்தினி கிளம்ப இது சென்னை மா இங்கே எங்க போய் எடுத்துட்டு வருவ என்று சொல்ல நான் வரும்போது பார்த்தாயா அங்க ஒரு அரச மரம் இருந்தது நான் பாத்துக்குறேன் என்று சொல்ல ஏற்கனவே சிங்காரத்திற்கு அடிபட்டிருக்கு பார்த்து பத்திரமா போயிட்டு வாம்மா என்று அனுப்பி வைக்கிறார்.
அர்ச்சனா சூர்யாவிற்கு ஃபோன் போட அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். என்ன பண்ணிக்கிட்டு இருக்க டார்லிங் என்று கேட்க தூங்கிகிட்டு இருக்கேன் என்று சொல்ல, இன்னைக்கு மறந்துட்டியா நம்மளோட எங்கேஜ்மென்ட் இன்னைக்கு என்று சொல்ல ஓ அப்படியா மறந்துட்டேன் சாரி என்று சொல்லுகிறார். பிறகு நம்ம பாரின் முதல்ல எப்ப சந்திச்சோம் அதைப்பற்றி எல்லாம் சூர்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் வந்து கிளம்பலையா சூர்யா என்று கேட்க இதோ கிளம்பிடுறேன் டாடி என்று சொல்லுகிறார். உங்க அம்மா சொன்ன மாதிரி இன்னும் கிளம்பாம இருக்கியா இனிமே நீ பழைய சூர்யா கிடையாது புது வாழ்க்கைக்கு போக போற அந்தப் பொண்ணுக்கு ஏத்த மாதிரி நீ மாத்திக்கணும் என்றும் இவ்வளவு நாளா அம்மா வீடு தான் உலகம் என்று இருந்துட்டு இந்த வீட்டுக்கு வரும்போது புருஷன் தான் அக்கறையோட இருக்கணும் இனிமே நீ பேச்சுலர் லைஃப்ல இருந்து வெளியே வந்து ஃபேமிலிமேனா நடந்துக்கோ ஆல் தி பெஸ்ட் என்று அருணாச்சலம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு சுந்தரவல்லி எல்லோரும் கிளம்பலாமா என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கி வருகிறார்.
அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் பொண்ண அழைப்பு வைக்கலையா என்று கேட்கிறார்.அதற்கு சுந்தரவல்லி நீங்க எந்த காலத்துல இருக்கீங்க அதெல்லாம் இப்ப யாரு செய்வாங்க அதை சம்மந்தி வீட்டிலேயே எதிர்பார்க்க மாட்டாங்க என்றெல்லாம் சொல்ல உடனே அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு சாங்கியம், சம்பிரதாயம் இருக்குது அந்த காலத்துல கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வர போற பொண்ணுக்கு எந்த ஒரு அச்சமும் ,சங்கடமும் இல்லாமல் இருக்க அதற்கு முன்னால் வர வைத்து பூ போட்டு வைத்து நாத்தனார் கையால் கூட்டி வருவது வழக்கம் என்றெல்லாம் அட்வைஸ் சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகி உங்ககிட்ட சொன்னதே தப்பு என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரம் பார்த்து அரசாணை கொம்புடன் நந்தினி உள்ளே வர சொன்ன மாதிரி எடுத்துட்டு வந்துட்டியேம்மா என்று பாராட்டுகிறார் அருணாச்சலம். உறவுக்காரர் ஒருவர் அந்த கொம்பை வாங்கிக் கொள்ள மாதவி நாங்க ரெண்டு பேர் இருக்கோம் நந்தினியும் எங்க கூட இருக்கட்டும் என்று சொல்ல இவளை எதுக்கு பொண்ணு விட்டு கூட்டு போறீங்க என்று கோபப்படுகிறார் இல்லம்மா அங்க எங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் என்று சொல்ல சுந்தரவல்லி யோசிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.