Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா செய்த செயல், கடுப்பில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

moondru mudichu serial promo 04-12-2024

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சூர்யா மற்றும் நந்தினியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வருகிறார். நீ காணாம போனப்ப நான் தேடுனது கூட பெருசு இல்லம்மா,ஆனா சூர்யாவும் அலைஞ்சு தேடினான் என்று நந்தினி இடம் சொல்லுகிறார். உள்ளுக்குள்ள அவனுக்கு பாசம் இருக்கு ஆனா அது சரியா காட்ட தெரியாது என்று சொல்லுகிறார். எல்லாமே ஒரு நாள் சரியாகும் என்று சொல்ல சரி இப்போ பேச வேண்டாம் வாங்க போய் சாமி கும்பிடலாம் என்று சூர்யா கூப்பிடுகிறார்.

நீ முன்ன மாதிரி வேலைக்கு போய் ஆபீஸ்ல சுறுசுறுப்பாக வேலை செய் என்று சூர்யாவிடம் சொல்ல, அப்போ நான் இப்ப டீசண்டா இல்லையா டாடி என்று கேட்கிறார். உடனே நந்தினியும் சூர்யாவுடன் ஆபீசுக்கு போக சொல்லுகிறார் நான் போய் அங்க என்னையா பண்ண போறேன் எப்படி இருந்தாலும் நான் ஆறு மாசம் கழிச்சு போக தானே போறேன். என்று சொல்ல மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா வா போகலாம் என்று அழைத்து செல்லுகிறார். மூவரும் சென்ற அர்ச்சனைக்கு கொடுக்கின்றனர்.நந்தினி கடவுளிடம் எப்படியாவது என் வீட்டுக்கு போக வச்சுரு என்னால இங்க இருக்க முடியாது என்று வேண்டிக் கொள்கிறார். நான் சாதாரணமான பொண்ணு இந்த பணக்கார வாழ்க்கை எனக்கு வேண்டாம் நான் என்னுடைய வீட்டுக்கு போகணும் என்று வேண்டிக்கொள்கிறார்.

அர்ச்சனை செய்துவிட்டு ஐயர் மாலையை கொடுத்து நந்தினிக்கு போட்டு விட சொல்லுகிறார். முதலில் தயங்கும் நந்தினி அருணாச்சலம் சொல்லியவுடன் சம்மதிக்கிறார். பிறகு கொஞ்ச நேரம் உட்காரலாம் நந்தினியிடம் பையை வாங்கி அதில் இருக்கும் தேங்காயை சூர்யாவிடம் கொடுத்து அதை உடைக்க சொல்ல சூர்யா அதை ஓங்கி உடைக்க பார்த்து இருவரும் நிறுத்த சொல்லுகின்றனர். பிறகு நந்தினி இடம் கொடுக்க அவர் தட்டி உடைத்துக் கொடுக்கிறார். பிறகு அருணாச்சலம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, நந்தினி வருத்தமாக இருக்க ஏமா இப்படி இருக்கு என்று கேட்க ஒன்றும் இல்லை ஐயா என்று சொல்லிவிடுகிறார். அருணாச்சலம் நந்தினிக்காக கடவுளிடம் மனதில் வேண்டிக்கொள்கிறார். அங்கு வந்த வயதான ஜோடியை பார்த்து புருஷன் பொண்டாட்டினா இப்படித்தான் இருக்கணும் என்று இரண்டு பேருக்கும் அட்வைஸ் கொடுக்கிறார். புருஷன் பொண்டாட்டி நான் உனக்காக நான் இருக்கேன் எனக்காக நீ இருக்கின்ற ஒரு அந்நூனியம் இருந்ததான சந்தோசம் இருக்கும் என்று பேசுகிறார். ஆனால் நந்தினி உங்க மகன் கிட்ட அதுதான் அடியோடு கிடையாது அப்படி இருந்திருந்தால் அவர் எனக்கு தாலி கட்டி இருக்கவே மாட்டார் என்று யோசிக்கிறார். பிறகு அருணாச்சலம் அவர் நண்பர் வந்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டு நான் பார்த்துட்டு வரேன் நீங்க கோயில சுத்திட்டு வாங்க என்று அனுப்புகிறார்.

பிறகு கோவிலை சுற்றும் போது நந்தினி இடம் நீ எதுக்கு வீட்டை விட்டுப் போன என்று சூர்யா கேட்கிறார். நீ ஜாலியா தான அங்க இருந்தா எதுக்கு போன என்று கேட்க, நந்தினி கோபமாக செல்ல சூர்யா நிற்க வைத்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்.இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு கொஞ்சம் இருந்தா என் உயிரே போயிருக்கும் என்று சொல்ல நானும் அதுக்காக தான் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன் என்று சொல்லுகிறார். மீண்டும் சூர்யா கேட்க உங்களால தான் வீட்டை விட்டுப் போன வீட்டை விட்டு போனது மட்டுமில்ல உங்களால தான் அந்த வீட்டுக்குள்ள வந்தேன் என்றும் கோபமாக சொல்லுகிறார்.

நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீங்க மட்டும் தான் காரணம் என்று சொல்ல சூர்யா எனக்கு ஒன்னும் புரியல என்று சொல்லுகிறார். அதை விடுங்க ஒரு வயசானவங்கள பாத்து உங்க அப்பா அவ்வளவு நேரம் பேசினாரே அதில் இருந்து உங்களுக்கு என்ன புரிஞ்சது என்று கேட்க, அவர் நிறைய பேசினார் எதைக் கேட்கிற என்று சொல்ல நந்தினி மீண்டும் வந்து விடுகிறார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க சூர்யாவின் திருமணத்தை பற்றி பேசுகின்றனர் அருணாச்சலம் ஒரு பக்கம் சுந்தரவல்லி அவளை வீட்டை விட்டே துரத்த முடிவு பண்ணிக்கிட்டு இருக்கா மறுபக்கம் இந்த பொண்ணு நான் ஆறு மாசம் கழிச்சு வீட்டை விட்டு போயிடுவேன்னு முடிவெடுத்து இருக்கா என்ன பண்றதுன்னு புரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே திடீர்னு கிளம்பி போய் தான் கடத்தல் வரைக்கும் போயிருக்கு என்று பேசுகிறார்.

அவர் வக்கீல் என்பதால் இதற்கு ஒரே ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லுகிறார். உனக்கென்ன உன் மருமக போகக்கூடாது வீட்டிலேயே இருக்கணும் அவ்வளவு தானே என்று சொல்லி அவங்க கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிடு அதுக்கப்புறம் அந்த பொண்ணே போனாலும் இல்ல உன் ஒய்ஃப் தொரத்தினாலும் சட்டபூர்வமா ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல அதுவும் நல்ல விஷயம்தான் என்று முடிவெடுத்து சொல்ல அவரும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுபக்கம் அந்த வயதானவர்கள் ஜோடியாக வந்து சூர்யாவிடம் எங்கள ஒரு போட்டோ எடுத்துக் கொடுக்கிறீர்களா என்று கேட்க எடுத்துக் கொடுக்கிறேன் போஸ் கொடுங்க என்று கையெல்லாம் போட்டுவிட்டு போட்டோ எடுத்து கொடுக்கிறார். உடனே அந்த பாட்டி உன்னோட சம்சாரமாப்பா என்று கேட்க ஆமா இவ என்னோட வைஃப் செல்லம் என்று கொஞ்சுகிறார். நீங்க இதே மாதிரியே சந்தோஷமா வாழ்க்கை ஃபுல்லா இருக்கணும் என்று சொல்ல இதே மாதிரி வேண்டாம் என்று சூர்யா சொல்லுகிறார் உடனே அந்த பாட்டி ஏன் பா இப்ப சண்டை போட்டு இருக்கீங்களா என்று கேட்க சூர்யா நந்தினி பார்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் சூர்யா கார் ஹாரன் சத்தமாக அடிக்க டென்ஷனான சுந்தரவல்லி இந்த வீட்ல இருக்கிற மரியாதை கௌரவம் எல்லாமே போயிடுச்சு என்று கத்தி பேசுகிறார். நந்தினி நான் யாருக்கும் நம்பிக்கை துரோகம் எல்லாம் பண்ணலாமா என்று சொல்ல பேசாத என்று சுந்தரவல்லி கத்துகிறார்.

உடனே குடும்பத்தினர் வெளியில் வர சூர்யா நந்தினி பார்த்து என் பொண்டாட்டி நந்தினி கூப்பிட்டு கார்மேல் இருக்கும் கவர் திறக்க சொல்லுகிறார். அதனைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றன. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo 04-12-2024

moondru mudichu serial promo 04-12-2024