Moondru Mudichu Serial Promo Update 02-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுரேகா கிச்சனிலிருந்து வர நந்தினி எதிரில் வந்தவுடன் சுரேகா கோபமாக சென்று விடுகிறார். உடனே நடந்த விஷயங்களை கல்யாணம் சொல்ல சமைத்துக் கொடுப்பதுதான் நம்ம வேலை என்று சொல்லி நந்தினி கிச்சனில் வேகவேகமாக சமைத்து சுரேகாவிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர, சுரேகா ரூமில் மாதவியிடம் கோபமாக பேசுகிறார். இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டணும் என பேசிக் கொண்டிருக்க நந்தினி வருகிறார். சுரேகாவுடன் என்ன மன்னிச்சுடுங்க என்று சொல்ல சூர்யா அனுப்பிட்டு இங்க வந்து ஒன்னும் தெரியாத மாதிரி பேசாத என்று சொல்லுகிறார். நான் சமைக்கிறேன் என்று தான் சொன்னேன் சூர்யா சார் தான் உட்கார வச்சுட்டாரு என்று சொல்ல மாதிரி நீ வச்சுட்டு போ அவள் சாப்பிடுவா என்று சொல்ல இனிமேல் இந்த தப்பு நடக்காதும்மா என்று சொல்லிவிட்டு ரூமில் இருந்து வருகிறார்.
சூர்யா நந்தினி இடம் இப்ப எதுக்கு நீ கீழ வந்த உன்ன வரவேணா தானே சொன்னேன் எல்லாத்தையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் வந்த கோபத்துக்கு தட்ட வாங்கிட்டு அந்த சுரேகாவை ஒன்று வைக்கலான்னு தான் பார்த்தேன் பிரச்சனை பெருசாக்க வேண்டாம் என்று விட்டுட்டேன் என்று சொல்லுகிறார்.நீ என்ன பெரிய கடவுளா அவங்க தான் உன்னை திட்டுறாங்க அசிங்கப்படுத்துறாங்கன்னு தெரியுது இல்ல எதுக்கு திரும்பவும் செய்ற என்று கேள்வி கேட்க அது என்னோட வேலை தான சார் என்று சொல்ல,அப்படியெல்லாம் ஒண்ணுமே கிடையாது என்று சூர்யா சொல்லுகிறார். நீ ஒன்னும் இங்க சமைச்சு போடுறதுக்கு இல்ல நீ எவ்வளவு சொன்னாலும் தாங்கிக்கிட்டு இருக்கறதுனால உனக்கு ஏதாவது அவார்ட் கொடுக்க போறாங்களா இல்ல, சிலை வைக்க போறாங்களா எதுவும் கிடையாது நீ முதல்ல உன்னை மாத்திக்கணும் நீ எல்லாத்துக்கும் தலையாட்டி கிட்டு நின்னா அவங்க பண்றது தப்புன்னு அவங்களுக்கு எப்படி தெரியும் அவங்கள திருத்தலனா கூட பரவால்ல உன்னோட மரியாதையை நீ காப்பாத்திக்கணும் இல்ல நந்தினி என்று சொல்லுகிறார்.
ரூம்ல இருக்கிற மூணுமே விஷப்பாம்புகள் இதுங்களுக்கு உதவிய பண்ணக்கூடாது என்று சொல்ல, மாதவி, சுரேகா, அசோகன் மூவரும் வந்து என்னடா ஓவரா பேசிகிட்டு இருக்க, முதல்ல நீங்க புருஷன் பொண்டாட்டியா என்று கேட்க என்னக்கா சொல்ற என்று சுரேகா கேட்க அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்காங்க அம்மாவ வெறுப்பேத்த தாலி கட்டிட்டு அதை மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருக்க அப்படித்தானே என்று கேட்கிறார். உடனே மாதவி நந்தினி இடம் கேட்க நந்தினி அமைதியாக இருக்க சுந்தரவள்ளியும் அருணாச்சலமும் வருகின்றனர். சுரேகா இவ எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சூர்யா சொல்றானா என்று சொல்ல, ஓ இந்த சார் கட்டளை போட்டிருக்காரா என்று கேட்க சுந்தரவல்லி இந்த வீட்டில உனக்கு வேலைக்காரியா இருக்க கூட தகுதி கிடையாது என்று கோபப்படுகிறார்.
உடனே சூர்யா நான் இருக்கும்போதே என் பொண்டாட்டியை இவ்வளவு பேர் கேள்வி கேக்குறீங்க என்று சொல்லுகிறார். வேலைக்காரியை வேற என்ன சொல்ல முடியும் என்று மாதவி சொல்ல, சூர்யா இந்த வீட்டோட மருமக என்று சொல்லுகிறார். சுரேகா ஓவரா வசனம் பேசிட்டு வீட்டை விட்டு போறேன்னு சொன்னா இப்ப எதுக்கு இங்கே இருக்கா என்று கேட்கிறார். சொகுசான வீட்டையும், கார் வசதி, மூணு வேளை சாப்பாடு இதையெல்லாம் எங்க கிடைக்கும் அதனால தான் என்று சொல்லுகிறார். நான் அதுக்காக எல்லாம் இல்ல சூர்யா சார் கை அடிபட்டதனாலதான் இருக்கேன் என்று சொல்ல, அதுக்காக தான் நான் இருக்கேன் அவனோட அக்கா தங்கச்சிங்க இருக்காங்க என்று சொல்ல என்ன நந்தினியை தான் பார்த்துக்கணும் வேற யாரையும் நான் நம்ப மாட்டேன் என சூர்யா சொல்லுகிறார். எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்களா இப்போ நான் பேசுகிறேன் என்று சொல்லி சூர்யா பேச ஆரம்பிக்கிறார். இங்க நினைக்கிற நந்தினி என்னோட பொண்டாட்டி அவளுக்கு நான் ஊரறிய தாலி கட்டி இருக்க அவ என் பொண்டாட்டி அவ என் கூட தான் இருப்பா அவ இந்த வீட்டில இருந்தாதான் இந்த வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கும். அவ இந்த வீட்ல இருக்கணுமா இருக்கக் கூடாதா என்று நான் தான் முடிவு பண்ணனும் அவ விஷயத்துல யாராவது தலையிட்டீங்கனா அதுக்கான முடிவு வேற மாதிரி இருக்கும் என வார்னிங் கொடுத்துவிட்டு நந்தினியை அழைத்துச் செல்கிறார். சுந்தரவல்லி தூங்காமல் கண் விழித்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் சூர்யா குடிப்பதற்கு சரக்கு பாட்டிலை திறக்க டைட்டாக இருப்பதால் பாட்டிலிடம் கொஞ்சி பேசிக்கொண்டு திறக்க முயற்சி செய்ய, முடியாததால் நந்தினி ரூமுக்குள் வந்தவுடன் திறக்கச் சொல்லிக் கேட்க முடியாது என சொல்லுகிறார். எங்க அக்கா தங்கச்சி கேட்ட உடனே மட்டும் ஓடிப்போய் குடைமிளகாய் செஞ்சு கொடுக்கிறேன் என்று சொல்ல அதுதானே என்னோட வேலை என்று சொல்ல அதற்கு தான் கல்யாணம் இருக்காருல்ல அவர் பார்த்து பாரு என்று சொல்லுகிறார் அப்போ நான் என்ன பண்றது என்று கேட்க ஜாலியா இரு ஷாப்பிங் போ என்று சொல்லுகிறார். அதுக்காக நான் இங்க வரலை என்று நந்தினி சொல்ல உடனே சூர்யா எனக்கு தெரியும் ஆனா இந்த விஷப் பாம்புகளுக்கு சமைச்சு கொடுக்க நீ வரலை என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் உங்கள பாத்துக்கறேன்னு நான் இங்கே இருந்த அதை வச்சு என்ன இப்படி பேசுறாங்க வாழவும் விட மாட்டாங்க வெளியே போவும் விட மாற்றிங்க என்று சூர்யாவிடம் கேள்வி கேட்கிறார். அவளே அட்டைப்பூச்சி மாதிரி இங்க சுத்திக்கிட்டு இருக்கா பீடை ஒழிஞ்சிதுன்னு சந்தோஷப்படாம என்று சொல்ல சூர்யா கோபப்படுகிறார்.
நந்தினி காணாமல் போய் உள்ளதால் சூர்யா எங்க போயிருப்பா என்று சொல்லி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…